கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 19, 2011

விரைவில் தி.மு.க. வீறு கொண்டெழும் - அ. கோபண்ணா


மதவாத சக்திகளை ஆட்சியிலிருந்து அகற்றுவ தற்காக ஏழு ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது காங்கிரஸ் கட்சி. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பெரு வெற்றி பெற்று சாதனை படைத்தது. 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற இக் கூட்டணி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. மன்மோகன்சிங் பிரதமராக ஆனதில் தி.மு.க.வின் பங்களிப்பு மகத்தானது. இக் கூட்டணி 2006 சட்டமன்றத் தேர்தலிலும் பெருவெற்றி பெற்றது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், இனி தி.மு.க. அவ்வளவுதான், மறுபடியும் அது ஆட்சிக்கு வரவே முடியாது என்ற முடிவுக்கு வருவது மிகவும் தவறான ஒன்றாகும். 1991 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ்-தி.மு.க. கூட் டணிக்கு ராஜீவ் காந்தி படுகொலையால் அனுதாப அலை வீசியபோது, இதனை விட மோசமான தோல்வியை தி.மு.க. சந்தித்து உள்ளது. 234 உறுப்பினர்கள் கொண்ட அவையில் அப்போது தி.மு.க. வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மறுபடியும் 173 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.இ.அ.தி.மு.க. வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது; ஜெயலலிதா உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்கள் மண்ணைக் கவ்வினர்.

தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மாறுதல் வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்று அதனைக் கருதத் தேவையில்லை. தமிழ்நாட்டு அரசியல் கரடு முரடான களத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்ப வர்கள் கடந்த காலத்தைப் போலவே, தி.மு.க. மறுபடியும் வீறுகொண்டெழுந்து வெற்றி பெற்று திரும்ப வருவ தற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்பதை ஒப்புக் கொள்வர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக காங்கிரசின் நம்பிக்கைக்குரிய கூட்டணி தோழமைக் கட்சியாக தி.மு.க. இருந்து வருகிறது. ஆனால், அ.இ.அ.தி. மு.க.வை இயல்பான பா.ஜ.கட்சியின் தோழமைக் கட்சி என்றே கூறலாம். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அக் கட்சிக்குக்குரிய இடத்தையும் அங்கீகாரத்தையும் அ.இ.அ.தி.மு.க. அளிக்கும் என்ற நம்பிக்கையை யாரேனும் வளர்த்துக் கொண்டால், அது முற்றிலும் தவறான ஒரு முடிவேயாகும். மதவாத சக்திகள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கான மாபெரும் அபாயத்தை நாடு எதிர்கொண்டு உள்ளது. சமூக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டிய தவிர்க்க முடியாத தேவை உள்ளது.

கணிசமாக 18 மக்களவை உறுப்பினர்கள் கொண்ட தி.மு.க.வின் உறவைத் துண்டித்துக் கொள்வது புதுடில்லி காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் கூடும். மதச்சார்பின்மை லட்சியங்கள் வெற்றி பெறவும், நாடு முன்னேற்றமடையவும், 2014 மக்களவைத் தேர்தல் வரை தி.மு.க.வுடனான கூட்டணி தொடர வேண்டும்.

அமைப்பு ரீதியில் பலமான அடித்தளம் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பலமற்றதாக இருக்கிறது. ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அவர்களையே அதிகமாக சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்து வந்துள்ளது. எனவே தங்களது தோல்விக்கு மற்றவர்களைக் குறை கூறுவது வீண் முயற்சியே. முதலில், நமது கட்சியை அடி மட்டத்திலிருந்து நாம் பலப்படுத்தவேண்டும்.

(நன்றி: டெக்கான் கிரானிக்கிள், 19.5.2011)

No comments:

Post a Comment