கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

கூட்டணி ஆட்சி கூடாதது அல்ல - முதல்வர் கருணாநிதி பேட்டி


சென்னையில் 29.04.2011 அன்று முதல்வர் கருணாநிதி ஒரு ஆங்கில தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அதுகுறித்த விவரம் வருமாறு:
கருத்துக் கணிப்பில் திமுக வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பொதுவாக நான் கருத்துக் கணிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த கருத்து கணிப்பு சரியாக இருக்குமேயானால் தொடர்ந்து அடுத்தடுத்து இந்த பத்திரிகை சார்பில் செய்யப்படுகின்ற கருத்துக் கணிப்பில் நம்பிக்கை வைப்பேன்.
இதில் எந்தெந்த விஷயங்கள் தி.மு.க.விற்கு ஆதரவாக வந்துள்ளன என்று நினைக்கிறீர்கள்?
திமுக என்பது ஒரு இயக்கம். திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தின்பால் மக்களுக்கு ஓர் ஆர்வமும் அக்கறையும் உள்ளது. இது வெறும் இயக்கமாக மாத்திரம் இல்லாமல் ஆளும் கட்சியாக வந்து மக்களுக்கு அண்மைக் காலத்தில் பல சாதனைகளை செய்து முடித்திருக்கிறது. நம்பகத்தன்மை வாய்ந்த கட்சியாக மக்களுக்கு இது இருக்கிறது.
உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி அமைச்சரவைக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? கூட்டணி அமைச்சரவை தான் நடக்குமென்று நினைக்கிறீர்களா?
சூழ்நிலைக்கு ஏற்ப எங்கள் கட்சி முடிவெடுக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூடாது என்றல்ல. கூட்டணி ஆட்சி தான் மத்தியில் நடக்கிறது.
தேர்தலுக்கு முன்பு பல பேர் உங்கள் கட்சி, ஆட்சி மீது அவதூறுகளை சொன்னார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவை எல்லாம் அவதூறுகள் என்று நீங்களே சொல்கிறீர்கள். அது அவதூறுகள் தான்.
மத்தியிலும் உங்கள் ஆட்சி தான் நடக்கிறது. இப்போது கருத்துக் கணிப்பில் நீங்கள் தான் வருவீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் ஆட்சி மீது வழக்குகள் வருகிறதே, அதெல்லாம் எப்படி இருக்கும்?
வழக்குகளை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்.
மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
இங்கே எழுதியிருப்பதை பாருங்கள். வாய்மையே வெல்லும். அதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் முதலமைச்சராக இருப்பீர்களா? அல்லது ஸ்டாலின் முதலமைச்சராக வருவாரா?
அதெல்லாம் எங்கள் கட்சி பொதுக்குழு முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள்.
உங்களுடைய ஆசை என்ன?
மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment