








அக்ரஹாரத்து அதிசய மனிதராம் வ.ரா.வைப் போல்
''அவாள்களை அய்யர் என்ற காலமும் போச்சே''
என்று பாடிய பாரதி வழியில் -
எம்மொழி செம்மொழி என
நம்மொழியாம் தமிழ் மொழியின் தலை உயர்த்திய
பரிதிமாற் கலைஞனின் பாதையில்
எழுபத்தேழு ஆண்டுக்கு மேலாக வாழ்ந்து
எழுச்சிமிகு தமிழால்
இன உணர்வு முரசம் ஒலித்தவர்!
என்பால் என்றைக்கும்
உலராத அன்பின் ஈரம் காத்தவர்!
காற்றில் மிதக்கும் தூசு ஒன்று
என் மீது பட்டாலே
ஆற்றொணா துயர் கொண்டு
அதனை விரட்டுவதில் அன்னையாய் வாய்த்தவர்!
குத்தூசி குருசாமிக்குப் பிறகு
கன்னல் தமிழில்
கடும் புயல் தமிழில்
எண்ண எண்ண இனிக்கின்ற
வண்ணத் தமிழில் இந்த
சின்னக்குத்தூசி படைத்திட்ட
எழுத்துச் செல்வமெல்லாம்
எடுக்கக் குறையாத
அடுக்கி மாளாத
அத்தனை பெரும் செல்வமென்பேன்.
No comments:
Post a Comment