திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் 26.05.2011 அன்று நடந்தது. மாணவர் அணி செயலாளர் இள புகழேந்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் கோவி செழியன், குத்தாலம் அன்பழகன், செங்குட்டுவன், க.மகிழன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியை கலைஞர் நாளாக மாணவர் அணி கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புதிய மாணவர்களை சேர்ப்பது என்றும் மாணவர்கள் பங்கேற்கும் திராவிட விழிப்புணர்வு கருத்தரங்கம், பட்டிமன்றம் நாடு முழுவதும் நடத்த கூட்டம் முடிவு செய்கிறது.
கல்லூரிகளில் திமுக மாணவர் அணி அமைப்புகளை புதுப்பிப்பதுடன் அமைப்புகள் இல்லாத கல்லூரிகளில் புதிய அமைப்புகள் உருவாக்க கூட்டம் முடிவு செய்கிறது.
சமச்சீர் கல்விக்காக நூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு சென்று கொண்டு இருந்த நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்களை குப்பையில் போட்டு விட்டு ஏற்றத்தாழ்வை விரும்பும் பழைய முறையே போதும் என்று அறிவித்து அவசரக் கோலத்தில் மக்கள் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதாவின் சுயரூபம் தெரியவந்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான இந்த போக்கை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
No comments:
Post a Comment