கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, May 10, 2011

அப்போதைக் கிப்போதே...


ஏங்காணும்... தேர்தல் கமி­ஷ‌ன் பிரமாதம்... தேர்தல்ல பணங் குடுத்தவாளையயல்லாம் பிடிச்சிட்டா... நேர்மையான தேர்தலை நடத்திட்டான்னு பெருமையா சொல்றோம்.

ஆமா ஓய்... அதில் இப்ப என்ன சந்தேகம் ஒமக்கு?

இல்லங்கானும்... ஏகப்பட்ட பணம் பூந்து விளையாடிடுத்து. எல்லாருக்கும் பணம் குடுத்திட்டான்னும் நம்மவாளே எழுது றாளே...? இது ரெண்டும் ஒன்னோட ஒன்னு கூடி வரலையேன்னு கேக்குறேன்.

அபிஷ்டு... அபிஷ்டு... நம்மவாளோட சாமர்த்தியம் இன்னும் ஒமக்கு விளங் கலையே!

நீர் என்ன சொல்றேள்?

இதோ பாரும் ஓய்... 13ஆம் தேதி, தேர்தல் முடிவெல்லாம் வருதோ, இல்லியோ... அன்னிக்கு நம்மவா ஜெயிச்சுட்டா, தேர்தல் கமிசனோட வெற்றி, நேர்மையான தேர்தலோட வெற்றின்னு சொல்லிரலாம். ஒரு வேளை, அந்தப் படுபாவி சூத்திரனே மறுபிடியும் ஜெயிச்சுட்டா, ஜனநாயகத்தைப் பணநாயகம் ஜெயித்துடுத்துன்னு தலை யங்கம் எழுதிடலாம். அதுக்காகத் தானே இப்பவே இரண்டையும் சொல்லி வைக்கிறது... புரிஞ்சிதோ!

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்

No comments:

Post a Comment