கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, May 9, 2011

தபால் வாக்குகள் எண்ண தொடங்கிய அரை மணி நேரத்துக்கு பிறகு சாதாரண ஓட்டு எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க கோரிக்கை



தபால் வாக்குகள் எண்ண தொடங் கிய அரை மணி நேரத்தில் சாதாரண ஓட்டுகளை எண்ண வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் வகையில், சென்னை கோட்டையில் 08.05.2011 அன்று 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர் பொன்முடி, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், எம்.பி.க்கள் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் தலைமை நிலைய செயலாளர் சிவலிங்கம், மக்பூல்ஜான்; பாமக சார்பில் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மகேந்திரன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் பழனிச்சாமி, பாஜ சார்பில் வக்கீல் வானதி சீனிவாசன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கல்யாணசுந்தரம், என்.சி.மகான், தேசியவாத காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி.ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை முடிவில் பிரவீன்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வாக்கு எண்ணிக்கை சுமூகமாகவும், அமைதியாகவும் நடக்கும் வகையில். மத்திய துணை தேர்தல் கமிஷனர் ஜெயபிரகாஷ் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருந்தார். கடைசி நேரத்தில் அவரால் வரமுடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கு வீடியோ மூலம் விளக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 13 ம் தேதி சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணி முடிந்தாலும், முடிக்காவிட்டாலும் 8.30 மணிக்கு சரியாக மற்ற வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 8 முதல் 14 மேஜைகள் போடப்படும். கடைசி 2 மேஜை வாக்குகள் எண்ணுவதற்கு முன்பாக, தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் கடைசி 2 மேஜை வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 2 புறமும் 100 மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது. கார்களில் வருபவர்கள் வாக்கு எண்ணும் மையங்கள் வரை நடந்தேதான் வர வேண்டும்.
தேர்தலின் போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த 121 பொது பார்வையாளர்கள், 57 செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
மொபைல் போன் பேச தனி அறை :
வாக்கு எண்ணிக்கை மையங்களில் அப்சர்வர் தவிர யாரும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. வேட்பாளர்கள், ஏஜெண்டுகள், பத்திரிகையாளர் அனைவரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் மொபைல் போன் கொண்டு செல்லலாம். ஆனால், வாக்கு எண்ணும் இடங்களில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில் மொபைல் போனை பயன்படுத்தலாம்.
வாக்கு எண்ணிக்கை பழைய முறைதான் :
கடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் என்ன முறைகள் பின்பற்றப்பட்டதோ, அதேமுறை தான் தற்போது நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போதும் பயன்படுத்தப்படும். கூடுதலாக ஒவ்வொரு மேஜையிலும் வீடியோ கேமரா, வெப் கேமரா பொருத்தப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ‘மைக்ரோ அப்சர்வர்’ பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.
தேர்தலின் போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த 121 பொது பார்வையாளர்கள், 57 செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 55 புதிய பார்வையாளர்கள் கொண்ட மத்திய குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள் 12ம் தேதி தமிழகம் வர உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டருக்கு வெளியில் நடைபெறும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளை மாநில போலீசார் பார்த்து கொள்வார்கள்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் :

வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 8 முதல் 14 மேஜைகள் போடப்பட உள்ளது. முதல் மேஜையில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, அடுத்த மேஜையில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கைக்கு அதிக நேரம் தேவைப்படும். இதனால், கடந்த தேர்தலை போல விரைவாக தேர்தல் முடிவுகளை வெளியிட முடியாது. முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.


இந்த
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அளித்த பேட்டி:

பொன்முடி
(திமுக):

வாக்கு
எண்ணிக்கை நடக்கும் இடங்களில் என்ன முறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது. முகவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பேசப்பட்டது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ண தொடங்கியவுடன், அரை மணி நேரத்துக்கு பிறகு இந்த ஓட்டு எண்ணி முடித்தாலும் முடிக்காவிட்டாலும், சாதாரண ஓட்டுகளை எண்ண ஆரம்பித்து விட வேண்டும். கடைசி 2 மேஜை ஓட்டுகள் எண்ணுவதற்கு முன்பாக தபால் ஓட்டு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் முகவர்கள், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள் செல்போனை வாக்குப்பதிவு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களில் கொண்டு செல்லக் கூடாது என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜி
.கே.மணி (பாமக):

பாமக
சார்பில் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி ஏற்று கொண்டுள்ளார். 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகள் இதனை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் எண்ணப்படும் வாக்குகள் குறித்த விவரங்களைபிரின்ட் அவுட்மூலம் தெரிந்து கொள்ள வகை செய்ய வேண்டும். முகவர்கள் மீது வழக்கு இருந்தாலும் அவர்களை ஏஜென்டுகளாக நியமிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஏஜென்டுகளாக இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த அமைப்புகளில் உள்ள துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் ஏஜென்டுகளாக நியமிக்க வேண்டும். தீப்பெட்டி, கைபேசி போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குகளை கணக்கிடும் வகையில் கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும். எந்தெந்த மேஜையில் எந்த வாக்குச சாவடிக்கான மின்னணு இயந்திரம் வைக்கப்படுகிறது என்ற பட்டியலை முன் கூட்டியே அளிக்க வேண்டும். அப்போது தான் பயனுள்ளதாக இருக்கும்.

சிவலிங்கம்
(காங்கிரஸ்):

தேர்தலை
அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேபோல், வாக்கு எண்ணிக்கை சுமூக மாக நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment