கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 5, 2011

உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரீ4 கோடி பரிசு முதல்வர் வழங்கினார்
உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரூ.4 கோடி பரிசுத் தொகையை முதல்வர் கருணாநிதி 05.05.2011 அன்று வழங்கினார். அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, தமிழக வீரர் அஸ்வின் ஆகியோர் முதல்வரிடம் இருந்து பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர்.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன் பட்டம் வென்று 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. மத்திய, மாநில அரசுகளும் பரிசுகளை அறிவித்தன.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். மேலும், அந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி பரிசுத் தொகை வழங்கும் விழா, புதிய தலைமைச் செயலகத்தில் 05.05.2011 அன்று காலை 11.15 மணிக்கு நடந்தது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மற்றும் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின் கலந்து கொண்டனர். முதல்வர் கருணாநிதி, கேப்டன் டோனியை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 857 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதேபோல சுரேஷ் ரெய்னாவுக்கும் முதல்வர் பொன்னாடை அணிவித்து காசோலை வழங்கினார். மற்ற வீரர்களுக்கான பரிசுத் தொகையை கிரிக்கெட் அணியின் செயலாளர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடியை முதல்வர் வழங்கினார்.
இதுகுறித்து டோனி கூறுகையில், “முதல்வரிடம் நேரில் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எங்களை நேரில் அழைத்து பாராட்டி கவுரவப்படுத்தி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை மேலும் ஊக்கப்படுத்தும். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தமிழக வீரர் அஸ்வின் கூறுகையில், “முதல்வரிடம் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி” என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, எ.வ.வேலு, டி.பி.எம்.மைதீன்கான், தலைமைச் செயலாளர் மாலதி, அட்வகேட் ஜெனரல் ராமன், இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர் சீனிவாசன் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டசபையை சுற்றிப் பார்த்த டோனி :

கேப்டன்
டோனி, வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின் ஆகியோருக்கு புதிய சட்டசபை வளாகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றிக் காட்டினார். பேரவையின் பிரமாண்டத்தை பார்த்து வியந்த டோனி, அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகள், வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் படங்களைப் பற்றி விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். சுமார் 10 நிமிடம் அவர்கள் பேரவையை சுற்றிப் பார்த்தனர். சபாநாயகர் இருக்கை, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதிகளையும் டோனிக்கு சுட்டிக் காட்டிய ஸ்டாலின், சபை நடக்கும் விதம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது சபாநாயகர் ஆவுடையப்பனை அறிமுகப்படுத்தி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோனி, ரெய்னா ஆகியோர், சட்டசபை மிகவும் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் கலைஞர் எங்களுக்கு நேரில் பரிசு வழங்கியது மிகவும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது என்றனர்.

No comments:

Post a Comment