கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 5, 2011

’’நமது எம்.ஜி.ஆர்.’’ செய்தி : கலைஞர் கண்டனம்


முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

’’ஜெயலலிதா அம்மையாரை நிறுவனராகக்கொண்டு வெளிவருஜ் அதிமுகவின் ‘’நமது எம்.ஜி.ஆர்.’’

நாளேட்டில் 3.5.2011 அன்று ‘’வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்க திட்டமா? - தேர்தல் ஆணையம்

கடும் அதிர்ச்சி’’ என்று தலைப்பிட்டு, அரைப்பக்கத்திற்கு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘’ஓட்டு எண்ணிககியின் போது, திமுகவுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன அப்போது

அதனை எப்படி எதிர்கொண்டு திமுகவுக்கு சாதகமாக திருப்புவது’’ என்பது குறித்து காவல்துறை உயர்அதிகாரி ஒருவர், காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலக்த்திலேயே கூட்டம் நடத்தி,


ஆலோசனைகள் வழங்கியதாகவும், இந்த சதிக்கூட்டம் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தகவல்

கிடைக்கவே, உண்மைகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இப்படி உண்மைக்கு மாறாகவும், தமிழக மக்களைத் திசை திருப்பி குழப்பம் ஏற்படுத்தவும், மக்கள்

மத்தியிலும் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல இருக்கும் அலுவலர்கள் மத்தியிலும் பீதியை உருவாக்கவும், திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனவே
இது குறித்து நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டரீதியாக

நடவடிக்கை எடுப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தியில் தேர்தல் ஆணையத்தையும் இணைத்து

உண்மைகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல்
ஆணையம் அப்படி முயற்சி மேற்கொண்டு, உண்மையைக் கண்டறிந்திருந்தால் அதனை உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும்,

உண்மைக்கு மாறானது என்று உணர்ந்தால், தேர்தல்
ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்புகிறேன். தமிழக மக்களூம் அதனையே எதிர்ப்பார்க்கிரார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment