கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்


சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நடிகர் வடிவேலு கூறினார்.
முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் 29.04.2011 அன்று நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். காலை 9.50 மணி முதல் 10.35 வரை இந்த சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு,


திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி. மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன். பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர். இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன் என்றார்.

கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில்: ராணா படம், கானா படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13 ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?

பதில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.
No comments:

Post a Comment