கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, May 28, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தினால் எதிர்கால தலைமுறை பாதிக்கும் : கலைஞர் கருத்து


சமச்சீர் கல்வி திட்டம் இப்போது நிறுத்தப்பட்டு விட்டால், எதிர்கால தலைமுறைக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்� என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 25.05.2011 அன்று நடந்தது. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்துச் செய்யப்போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதனை அவர்கள் கூட்டணி கட்சிகளே எதிர்த்திருக்கிறார்களே?
சமச்சீர் கல்வி என்பது பெயரளவில் மாத்திரம் அல்லாமல், எல்லோருக்கும், எல்லா மாணவர்களுக்கும் சம நிலையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் உட்பட சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களுடைய குரலுக்கு, கருத்துக்கு மதிப்பளித்து திமுக ஆட்சியில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, எதிர்கால நன்மையைக் கருதி, தலைசிறந்த கல்வியாளர்களின் ஒப்புதலோடும், அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்து பேசுகின்ற வாய்ப்பைப் பெற்று சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் இப்போது நிறுத்தப்படுகிறது என்றால் எதிர்கால தலைமுறைக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சட்டமேலவை வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
எதிர்பார்த்ததுதான் நடக்கிறது.
மாணவர்களின் கல்விக் கட்டண பிரச்சினையில் அரசாங்கத்திற்கு சம்மந்தம் இல்லை என்றும், பள்ளிக்கும் அந்தக் குழுவிற்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும், அதிலே அரசு தலையிடாது என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பத்திரிகையாளர்களாகிய நீங்களாவது தலையிடுங்கள்.
திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் உரிய முறைப்படி மீட்கப்படும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
அப்படி ஏதாவது இருந்தால், அதைத் திரும்பப் பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில், எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
ராஜிவ்காந்தி கொலையோடு திராவிட இயக்கத்தை முடிச்சுப் போட்டு யாரோ ஒருவர், தற்போது திடீரென்று எதையோ சொல்லுகிறாரே?
அவர் யார் என்றோ, என்ன சொன்னார் என்றோ எங்களுக்குத் தெரியாது.
திமுகவின் ஒவ்வொரு திட்டமாகப் பார்த்து குறிப்பாக தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி, மேலவை என்று படிப்படியாக அதிமுக ஆட்சியினர் ரத்து செய்து வருகிறார்களே?
வருந்த வேண்டியவர்கள், வாக்களித்தவர்கள்.
டெல்லிப் பயணம்?
திகார் சிறையிலே இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, என்னுடைய மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோரை கண்டு வருவதற்காக நான் மேற்கொண்ட பயணமாகும். டெல்லியில் தங்கியிருந்த ஓட்டலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், புதுவை நாராயணசாமி, ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா, ஜெயந்தி நடராசன் ஆகியோர் என்னை சந்தித்துப் பேசிச் சென்றார்கள்.
சோனியா காந்தியை சந்திக்க வாய்ப்பிருந்தும் நீங்கள் சந்திக்கவில்லையே?
வாய்ப்பு இருந்தது. சோனியாகாந்தியை சந்திக்க நேரம் இருந்தும், நான் என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே சந்திக்கவில்லை. அப்படிச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.
சட்டப்பேரவை உறுப்பினராக எப்போது பதவியேற்கப் போகிறீர்கள்?
பேரவைத் தலைவர் குறிப்பிடும் நாளில்.
இந்த முறை ஆட்சியை இழந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அதைப் பற்றி தொண்டர்களுக்கு �முரசொலி”யில் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து பேராசிரியரும் அறிக்கையாக வெளியிட்டிக்கிறார். இதைத் தவிர, அரசு செய்கின்ற நல்ல காரியங்களுக்கெல்லாம் திமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். செய்தியாளர்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருந்த இஸ்லாமிய தோழர் மரியம்பிச்சையின் அகால மரணத்திற்காக திமுக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதைக்கூட விபத்து இல்லை, சதி என்று சொல்லியிருக்கிறார்களே?
போலீசாரைக் கொண்டு விசாரிக்கும்படி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அவர்கள் விசாரித்து முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கனிமொழியின் ஜாமீன் மனுவை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்களே?
கனிமொழி துணிச்சலோடும், உறுதியோடும் இந்த நிலையைச் சமாளிப்ப தாக கூறியிருக்கிறார். அத்துடன் சட்ட ரீதியாகவும், நீதி கிடைக்கும் என்று கனிமொழியும், நானும் நம்புகிறோம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment