கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 6, 2011

கனிமொழி கோர்ட்டில் ஆஜர் ஆனார்



ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்று கனிமொழியை குற்றம்சாட்டி இரண்டாம் முறையாக குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.


இதையடுத்து மே 6 ல் ஆஜர் ஆகும்படி கனிமொழிக்கு, நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதை ஏற்று, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராவதற்காக 04.05.2011 அன்று டில்லிக்கு சென்றார் கனிமொழி.

06.05.2011 அன்று காலை பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக கனிமொழி ஆஜர் ஆனார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

கனிமொழி, பாட்டீயாலா இல்ல வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் 06.05.2011 அன்று ஆஜரானார். அப்போது அவரது தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடினார்.

ராம்ஜெத்மலானி வாதாடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரே தவிர, அவருக்கும் 2ஜி விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி, குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றதால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. இந்த (கலைஞர் டிவி) நிறுவனத்தைப் பொருத்தவரை அனைத்து பணப் பரிமாற்றங்களும் காசோலைகள் மூலமே நடந்துள்ளன. எனவே, கருப்புப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அல்தாப் அகமது, சிபிஐ தாக்கல் செய்த முதல் குற்றப் பத்திரிகையில் கலைஞர் தொலைக்காட்சி பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம். இதற்கான நிதியை பல்வேறு ஆதாரங்களின் மூலம் திரட்ட உரிமை உண்டு. 200 கோடி ரூபாய் பணம் வர்த்தக ரீதியான பணப் பரிமாற்றமே தவிர வேறு ஏதும் இல்லை. அந்தப் பணம் முறைகேடான பணமா, இல்லையா என்பது எப்படித் தெரியும். அந்த 200 கோடி ரூபாய் பணமும் 10 சதவிகித வட்டியுடன் திருப்பி தரப்பட்டுவிட்டது. வணிக நிறுவனங்கள் மீது இப்படி தவறான வழக்குகளை தொடர்ந்தால் இந்தியா எப்படி வளர்ச்சி அடையும் என்று வாதாடினார்.

2ஜி ஊழல் வழக்கு - கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை 07.05.2011 அன்று வரை ஒத்திவைப்பு :

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 07.05.2011 அன்று (சனிக்கிழமைக்கு) ஒத்திவைத்தது.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் ஜாமீன் மனுவை பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி தாக்கல் செய்தார்.

கனிமொழி ஒரு சட்டத்தை ம‌தித்து நடக்கும் பிரஜை என்றும் அவர் ஒரு பெண் எம்.பி., 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் முக்கியக் குற்றச்சதியில் ஈடுபடாதவர் என்பதோடு, பெண் என்கின்ற முறையில கனிமொழிக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.

கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 07.05.2011 அன்று (சனிக்கிழமை) வரை ஒத்திவைத்தார்.

இதேபோல், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமாரின் ஜாமீன் மனுவும் ஒத்திவைக்கப்பட்டது.

சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் மொரானிக்கும் 06.05.2011 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ சிகிச்சை காரணங்களைக் காட்டி அவர் ஆஜராகவில்லை.

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் 'கூட்டுச் சதியாளர்' ஆக இடம்பெற்றுள்ள தமிழக முதல்வரின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி 06.05.2011 அன்று காலை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் கனிமொழியுடன் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், திமுக அமைச்சர்கள் பழனிமாணிக்கம், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வம், கனிமொழியின் கணவர் அரவிந்தன், தாய் ராசாத்தி அம்மாள் ஆகியோர் உடன் வந்தனர்.

கனிமொழி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி, "கனிமொழிக்கு எதிராக எந்த வழக்கும் தொடர முடியாது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. கனிமொழி எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறார்.

ஆ.ராசா மீது முக்கியக் குற்றச்சதியாளராக குற்றம்சாட்டப்பட்டுள்ளதே தவிர கனிமொழி மீது அல்ல. அவர் கலைஞர் டிவியில் குறைந்த அளவு பங்கு கொண்ட பங்குதாரர் மட்டுமே. கலைஞர் டி.வி.,யில் எந்த ஒரு அன்றாட நிகழ்வுகளிலும் கனிமொழி பங்கேற்றது கிடையாது. கனிமொழி கலைஞர் டி.வி.,யின் போர்டு உறுப்பினர் இல்லை. அவர் எந்த ஒரு போர்டு மீட்டிங்கிலும் கலந்து கொண்டது இல்லை. ஒரு பெண்ணாக அவரை நல்ல முறையில் அணுக வேண்டும். அவர் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

சட்டப் பிரிவு 437-ன் படி பெண்கள், வயதானவர்கள், சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்குவது என்பது இயல்பான விஷயம்," என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன், தி.மு.க., எப்போதும் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கும் என்றார்.

மயங்கி விழுந்த திமுக எம்.பி.!

கனிமொழி ஆஜராவதை முன்னிட்டு திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment