கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, May 17, 2011

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நன்றி அறிவிப்பு பிரசாரம்


திமுக தலைமைக் கழகம் 16.05.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொ ளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதையடுத்து, தொகுதி வாக்காளர்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி சொல்ல உள்ளார். அதன்படி 50, 54 வட்டங்களில் இன்று மாலை 4 முதல் இரவு 10 மணி வரை வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறுகிறார். 54வது வட்டம் 25வது தெரு முத்துமாரியம்மன் கோயிலில் நன்றி அறிவிப்பு பிரசாரத்தை தொடங்குகிறார்.
51, 52, 53 வட்டங்களில் நாளை மாலை 4 முதல் இரவு 10 மணி வரை வாக்காளர்களை சந்தித்து நன்றி சொல்கிறார். 51வது வட்டம் கோபாலபுரம் சந்திப்பில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்குகிறார். 62வது வட்டத்தில் வரும் 19ம் தேதி மாலை 4 முதல் இரவு 10 மணி வரை வாக்காளை சந்தித்து நன்றி செல்ல உள்ளார். கொளத்தூர் அண் ணா சிலை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொ டங்குகிறார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment