கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரித்த பிஏசி அறிக்கை நிராகரிப்பு


ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற பொது கணக்கு குழு(பி.ஏ.சி) வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டது; நிராகரிக்கும் தீர்மானத்துக்கு காங்கிரஸ், திமுக உட்பட 11 எம்.பி.க்கள் ஆதரவாக ஓட்டு போட்டனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றிய புகார் தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்கு குழு விசாரித்தது. குழு தலைவராக பா.ஜ.வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி உள்ளார். இக்குழுவில் காங்கிரஸ் 7, திமுக 2, பா.ஜ. 4, அதிமுக 2 மற்றும் சிவசேனா, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
குழு விசாரணை முடிந்து வரைவு அறிக்கையை ஜோஷி தயாரித்து, 27.04.2011 அன்று உறுப்பினர்களுக்கு அனுப்பினார். அந்த அறிக்கை அவுட் ஆகி, பத்திரிகைகளில் வெளியானது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தை பிரதமர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அறிக்கை வெளியானதால், ஜோஷி விலக வேண்டுமென காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குழுவின் இறுதி கூட்டம் 28.04.2011 அன்று காலை நடந்தது.
வரைவு அறிக்கையை நிராகரிப்பதாக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய 11 உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதன்பின், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் கூடியது.
அப்போதும் கூட்டத்தில் கூச்சல், குழப்பமாக காணப்பட்டுள்ளது. ஜோஷி திடீரென கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பகுஜன் உறுப்பினர்கள் சேர்ந்து மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சைபுதீன் ஜோஸை குழு தலைவராக தேர்வு செய்தனர். அவர் வரைவு அறிக்கையை நிராகரித்து தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக தி.மு.க. காங்கிரஸ் உட்பட 11 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து, தீர்மான நகலுடன் ஜோஸ் நேராக ஜோஷி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியரிடம் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் ஜோஸ் கூறுகையில், ‘கூட்டத்தில் நடந்தவற்றை மக்களவை சபாநாயகரிடம் தெரிவிப்பேன். அவர் முடிவெடுப்பார்’ என்றார்.
இதனிடையே, டெல்லியில் நிருபர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், பி.ஏ.சி குழு அறிக்கை தாக்கலாகும் முன்பே, வரைவு அறிக்கை சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை லீக் ஆனது எப்படி என தெரியவில்லை. அது பற்றி விசாரிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் முன் வரைவு அறிக்கை மீது கருத்து சொல்ல முடியாது. குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதை விவாதித்து தீர்ப்பதே ஜனநாயகம். என்று தெரிவித்தார்.
ஜோஷி வெளியேறியது ஏன்?
பரபரப்பான திருப்பங்களுடன் 28.04.2011 அன்று பி.ஏ.சி., கூட்டம் காலையில் துவங்கியது. காரசார விவாதமும், கூச்சலும் நிலவியதால் கூட்டத்தை நான்கு மணிக்கு ஒத்திவைத்து விட்டு ஜோஷி கிளம்பி விட்டார்.
மீண்டும் கூடியபோது, அவரை பேச விடாமல், ஓட்டெடுப்பு விடும் படி வலியுறுத்தினர் பெரும்பான்மை உறுப்பினர்கள். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜோஷி வெளியேறி விட்டார்.
நிருபர்களிடம் ஜோஷி கூறுகையில், ‘வரைவு அறிக்கை வெளியே தயாரிக்கப்பட்டதாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். நான் பதிலளிக்க முற்பட்ட போது, அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. அமளி நிலவியதால், கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு வந்தேன்’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment