நக்கீரன் (2011 ஏப்.11) வெளியிட்டுள்ள ஒரு செய்தி, நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வின் நெருங்கிய உறவினரான வி.எஸ்.சம்பத், தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சி !
ஒரு கட்சித் தலைவரின் நெருக்கமான உறவினரைத் தேர்தல் ஆணையம் எப்படிப் பொறுப்பில் அமர்த்தலாம்? அப்படியே அமர்த்தினாலும், நாணயமுள்ளவராக இருந்தால், அந்த அதிகாரி அந்தப் பொறுப்பை மறுத்திருக்க வேண்டாமா?
ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், இது குறித்து மட்டும் ஏன் வாய் திறக்கவில்லை?
நன்றி : கருஞ்சட்டைதமிழர்
No comments:
Post a Comment