கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

தமிழகத்தில் மட்டுமே தேர்தல் கமிஷன் கெடுபிடி - மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்


தேர்தல் நடந்த 5 மாநிலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் கடைபிடித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்.பி அலுவலகத்தில் காரைக்குடி மற்றும் திருப்புத்து£ர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
கேரளா, அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையும். மேற்கு வங்காளத்தில் உள்ள 290 தொகுதியில் 200 தொகுதிக்கு மேல் மம்தாபானர்ஜி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் கணிக்கமுடியாத நிலை உள்ளது. இருப்பினும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். வெற்றிபெறும் கட்சிக்கும், தோல்வி அடையும் கட்சிக்கும் இடையே சுமார் 10 முதல் 15 இடங்கள்தான் வித்தியாசம் இருக்கும்.
தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். மற்ற மாநிலங்களில் கட்சி தொண்டர்கள் சின்னம் பொறித்த தொப்பி, பிளக்ஸ், பேனர், பொதுக்கூட்டம் என அனைத்தும் நடந்தது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தேர்தல்கமிஷன் பல்வேறு கெடுபிடிகளை விதித்து நடைமுறைபடுத்தி உள்ளது. தேர்தல் நடந்த 5 மாநிலங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் கடைபிடித்துள்ளது.
இதுகுறித்து வரும் 13ம் தேதிக்கு பின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். எப்போதும் இல்லாதவகையில் பெண்கள், இளைஞர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது என பேசினார். எம்எல்ஏக்கள் சுந்தரம், ராமசாமி, சாக்கோட்டை ஒன்றியக்குழு துணைத்தலைவர் காந்தி, நகரச்செயலாளர் குமரேசன், தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் ராதா, கண்டனு£ர் பேரூராட்சித்தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment