கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை: ஜெயந்தி நடராஜன்


காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என, ஜெயந்தி நடராஜன் எம்.பி. கூறியுள்ளார்.

முதல் அமைச்சர் கலைஞரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவி ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 30.04.2011 அன்று சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன்,

இன்றைய தினம் முதல் அமைச்சர் கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழக தேர்தலை பொறுத்தவரையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, கலைஞர் ஆறாவது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி: காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் 2ஜி விவகாரத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

பதில்:
காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. 2ஜி பிரச்சினையை பொறுத்தவரையில், அது உச்ச நீதிமன்றத்திலே தொடங்கி பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை.

கேள்வி: தமிழக இளைஞர் காங்கிரசிலே பிரச்சினைகள் தங்கபாலு நீக்கம் போன்றவை குறித்து உங்களுடைய கருத்து?

பதில்:
தமிழக இளைஞர் காங்கிரசார் பிரச்சினையை பொறுத்த வரையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவடைந்ததும், அது குறித்த அறிக்கை ராகுல்காந்தியிடம் அளிக்கப்பட்டு, அவர்தான் இறுதி முடிவு எடுப்பார். அதே போன்று, தங்கபாலு பிரச்சினையை பொறுத்த வரையில், கட்சி மேலிடம் தான் இதுகுறித்து முடிவு செய்யும்.

கேள்வி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இதர மாநில தேர்தல்கள் குறித்து கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று செய்திகள் வருகின்றன. அதுகுறித்து உங்கள் கருத்து?
பதில்: பொதுவாக, தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய தேர்தல் கணிப்புகளை நாங்கள் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது வெறும் சாம்பிள் சர்வே. தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்கிற நேரத்தில், முக்கியமாக தேர்தல் நடக்கிற தினத்தன்று, மக்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் தேர்தல் முடிவுகள் அமையும்.
அந்த அடிப்படையில் பார்த்தால், ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு மக்களிடையே அமோக ஆதரவு இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக புரிந்துள்ளது.. அதன் காரணமாகத்தான், இப்போது எதிர்க்கட்சியினர் அமைதியாக இருந்து வருகின்றனர்.
கேள்வி: 2ஜி பிரச்சினையில் காங்கிரஸ் & திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்கிறீர்களா?
பதில்: 2ஜி பிரச்சினையில் திமுக & காங்கிரஸ் கூட்டணியில் இப்போது அல்ல; எப்போதும் விரிசல் வர வாய்ப்பில்லை.
கேள்வி: காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 19 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாக, தங்கபாலுவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வலியுறுத்தப்படுகிறதே?
பதில்: காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 19 நிர்வாகிகள் நீக்கப்பட்டது குறித்து ஏற்கெனவே விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையில் இறுதி முடிவு மேல்மட்டத்திலே எடுக்கப்படும்.
இவ்வாறு ஜெயந்தி நடராஜன் கூறினார்.

No comments:

Post a Comment