கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 4, 2011

இயக்குநர் பாலசந்தருக்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி வாழ்த்து
திரைப்பட துறையில் அனுபவமும், புகழும் பெற்ற டைரக்டர் கே.பாலசந்தருக்கு மத்திய அரசு 2010ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது.


பாலச்சந்தருக்கு திரையுலகனர், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலச்சந்தருக்கு விருது கிடைத்திருப்பதையடுத்து, 30.04.2011 அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், நான் பாலச்சந்தரின் தீவிர ரசிகன். அவர் இயக்கிய பல படங்களை நான் பார்த்துள்ளேன். அவற்றில் சில படங்களை பலமுறை பார்த்துள்ளேன். அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. அதற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த விருது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த கவுரவம் என்றார்.


இதேபோல் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, பாலச்சந்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment