சி.ஏ.ஜி. அறிக்கையின் முன்னுரையில் 2003-04 முதல் 2009 - 2010 வரை கணக்குத் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2008 - 2010 வரைதான் கணக்குத் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. 2003-07 வரையுள்ள ஆண்டுகளின் கணக்கு ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? இதற்கு ஏதாவது உள்நோக்கம் உள்ளதா?
1994இல் அறிவிக்கப்பட்ட தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கையின்படி ஏலமுறை கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. அப்படி ஏலம் எடுத்த ஒரு சிலர் அந்தப் பணத்தைச் செலுத்த முடியாத நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுகி, எங்களால் தொலை பேசி இணைப்புகளையும் அதிகரிக்க முடியவில்லை. வருமானத்தையும் பெருக்க முடியவில்லை என்று முறையிட்டனர். இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இதன்படி ஏலமுறை தோல்வியடைந்து விட்டது.
1994இல் இந்தியா முழுவதும் ஒரு நிமிடம் பேச ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அப்போது தொலை பேசி இணைப்புகளின் எண்ணிக்கை 30 லட்சம்தான்.
1999இல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோதுதான் புதிய தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை அறி விக்கப்பட்டது. இதன்படி ஏலமுறை நீக்கப்பட்டு, முதலில் வருவோர்க்கு முன்னுரிமை (First Come First Served Basis) அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் பிரமோத் மகாஜன்.
1999இல் தொலைத் தொடர்புக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது, மொத்தத் தொலைபேசி இணைப்புகள் 1.6 கோடி, இந்தியா முழுவதும் ஒரு நிமிடம் பேச கட்டணம் ரூ.16.
தொலைபேசிக் கட்டணங்கள் (எஸ்.டி.டி. ஒரு நிமிடம் பேச) 1995 - ரூ.30, 2002 - ரூ.9.60, 2003 - ரூ.3, 2010 - 40 பைசா.
செல்பேசிக் கட்டணங்கள் (இந்தியா முழுவதும் ஒரு நிமிடம் பேச) : 2002 - ரூ.16-32, 2003 - ரூ.16-32, 2010 - 30 பைசா (குறைந்தபட்சமாக)
தொலைபேசி, செல்பேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை :
மார்ச் 1995 - 30 லட்சம்
1999 - 1 கோடியே 60 லட்சம்
2003 - 28 கோடி
2008 - 30 கோடி
2009 - 43 கோடி
2010 - 62 கோடி
நவம்பர் 2010 - 73 கோடி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்த உரிமக் கட்டணமும் ஸ்பெக்ட்ரம் கட்டணமும் :
2002 - 03 - 5,467 கோடி ரூபாய்
2007 - 08 - 11, 910 கோடி ரூபாய்
2008 - 09 - 13,214 கோடி ரூபாய்
2009 - 10 - 13,588 கோடி ரூபாய்
தொலைத் தொடர்பின் அடர்த்தி(Tele Density) ( 100 பேருக்கு) :
2001 - 10.37 சதவிகிதம்
2004 - 14.32 சதவிகிதம்
2008 - 26.22 சதவிகிதம்
2009 - 88.34 சதவிகிதம்
2010 - 110.69 சதவிகிதம்
1999இல் வெளிவந்த தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கையின்படி 2010-க்குள் ஆயிரத் திற்கு 15 இணைப்புகள் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், 2010இல் 110.69 சதவிகித தொலைத் தொடர்பின் அடர்த்தியை எட்டியுள்ளது மகத்தான சாதனையாகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிமக் கட்டணமாக முதலில் ஒரு தொகையைச் செலுத்திவிட்டு உரிமத் தைப் பெற்ற பிறகு அந்நிறுவனம் பெறுகிற வருமானத் தில் ஒரு பகுதியைத் தொலைத் தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டும். இதன்படி ஒரு தொலைபேசி தொடர்புக்கு மூன்றிலிருந்து நான்கு பைசா தொலைத் தொடர்ப்புத் துறைக்குத் தொடர்ந்து செலுத்த வேண்டும். இதுதான் ஸ்பெக்ட்ரம் கட்டணம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஏலமுறையில் ஒரு தொகையைச் செலுத்திவிட்டு அதற்குப் பிறகு எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.இராசா மே 2008ல் பொறுப்பேற்றபோது, மொத்தத் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 30 கோடிதான். ஆனால், அவர் பதவி விலகும்போது நவம்பர் 2010இல் 73 கோடியாக உயர்ந்தது.
2007இல் இந்தியா முழுவதும் செல்பேசியில் ஒரு நிமிடம் பேச 1 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆ.இராசா பதவி விலகியபோது, ஒரு நிமிடம் பேச கட்டணம் 30 பைசா!
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல உண்மைகளை ஊடகங்கள் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு மூடி மறைத்து அவதூறாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதற்கு அரசியல்ரீதியான காரணங்கள் நிறைய உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆரோக்கியமான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தயாராக உள்ளன. இதைப் பிரதமரும் பலமுறை அறிவித்துவிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினர் ஒரே பிடிவாதமாகப் போகாத ஊருக்கு வழிதேடுகிற வகையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று கூறுகின்றனர்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அரசியல் மேடையாக்கி, முறையான விசாரணை நடத்தாமல் அவதூறு பிரச்சாரத்தை ஊடகங்கள் துணையோடு நடத்த பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் முனைவது ஜனநாயகத் திற்கே விடப்படுகிற சவாலாகும். இதுவரை 13 நாள்கள் நாடாளுமன்றம் நடைபெறாமல் முடக்கப் பட்டுள்ளது. இதனால், ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர் கள் இதுகுறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது.
No comments:
Post a Comment