கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஊகமான மதிப்பீடு - ஆ.இராசாவின் வழக்கறிஞர் அந்தியர்ஜூனா வாதம்


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது ஊகமான மதிப்பீடு என்று, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசா வின் வழக்கறிஞர் வாதிட்டார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக வும், இதனால் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசாவின் சார்பில், மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்தியர்ஜுனா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வாதாடினார். அவர் வாதாடுகையில் கூறியதாவது:

மத்திய கணக்கு தணிக்கை அதி காரியின் விசாரணை அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டுக்காக வழங்கப்பட்ட உரிமங் களின் உண்மையான தொகையை மதிப்பிடும் பொறுப்பில் இருந்து தொலைத்தொடர்புத் துறை தவறி விட்டதாக கூறப்பட்டுள்ளது. அலை வரிசை ஒதுக்கீட்டில் அரசு கருவூ லத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பது வெறும் ஊகமான மதிப்பீடு தான். ஊகத்தின் அடிப்படையில் மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டுள் ளது. மேலும் இந்த அறிக்கை, சம்பந் தப்பட்ட பிரச்சினை குறித்த கருத்து தான் என்பதால் அது பற்றி நீதித்துறை பரிசீலிக்க முடியாது.

அந்தியர்ஜுனா இவ்வாறு கூறியதும் நீதிபதிகள் குறுக்கிட்டு,

அந்த அறிக்கை பொதுக்கணக்கு குழுவின் ஆய்வில் இருக்கும் போது நீதிமன்றம் என்ன முடிவு செய்ய வேண் டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு அந்தியர்ஜுனா பதில் அளிக்கையில்,

அலைவரிசை ஒதுக்கீடு பற்றி மத்திய கணக்கு தணிக்கை குழு தணிக்கை செய்து தெரிவித்து இருக் கும் விவரங்களை, நிலையான முறை யில் மேற்கொள்ளப்பட்ட மதிப் பீடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது,

2003 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான அலைவரிசை ஒதுக்கீடு பற்றிய விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை குழு ஆய்வு செய்து இருக்கிறது. ஆனால் ஆ.இராசா 2007 ஆம் ஆண்டுதான் தொலைத்தொடர் புத் துறை அமைச்சர் ஆனார். அவர் அமைச்சர் ஆவதற்கு முன், அந்த இலாகாவில் தயாநிதி மாறன் மற்றும் அருண்ஷோரி ஆகியோர் அமைச்சர் களாக இருந்த போது 52 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டுக்கான உரிமம் வழங்குவதில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையி லேயே தொலைத் தொடர்பு துறை செயல் பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, நடைபெற்ற முறை கேட்டுக்கு ஆ.இராசாதான் பொறுப்பு என்பது போல மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதி கள் குறுக்கிட்டு,

மத்திய கணக்கு தணிக்கை குழு அதிகாரம் பெற்ற தணிக்கை அமைப்பு என்றும், அரசு சரி என்று சொல்வதற்கெல்லாம் அது கட்டுப் பட்டதல்ல என்றும் கூறினார்கள். அத்துடன் தணிக்கை என்பது ஒழுங்கு நடவடிக்கை அல்ல என்றும், சில அம்சங்கள் தொடர்பாக சில ஆட் சேபங்களை அந்த அமைப்பு எழுப்பி இருக்கிறது என்றும் கூறினார்கள்.

தொடர்ந்து அந்தியர்ஜூனா கூறிய தாவது,

இராசா அமைதி காப்பதால்....

ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினையில் எனது கட்சிக் காரர் ஆ.இராசா அமைதி காப்பதால் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கருதிவிடக்கூடாது. மேலும் இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் விசார ணையில் இருந்து வருகிறது. ஆனால் ஊடகங்கள் அவரை குற்றவாளி போன்றும், வில்லன் போன்றும் சித் தரித்து கண்டித்து உள்ளன. இதனால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதை எந்த வகை யிலும் மீட்க முடியாது.

தனது கட்சியின் விருப்பம், அர சியல் ரீதியிலான கட்டாயம், அரசியல் சட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டே ஆ.இராசா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற் பட்டதாக கருதப்படும் ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப் புக்கு அவர்தான் பொறுப்பு என்பது போல் சித்தரிக்கிறார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போதே, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை வரைவு அறிக்கையில் உள்ள விவரங் கள் கசிந்தது எப்படி சரியாகும்? 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் 16 நாள்கள் முடங்கி உள்ளன. நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன் இது போன்று நடந்தது இல்லை.

- இவ்வாறு வழக்கறிஞர் அந்தியர் ஜூனா வாதாடுகையில் கூறினார்.

அரசியல் சட்ட அமைப்பான மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும் முன்பே, அதில் உள்ள விவ ரங்கள் வெளியானது பற்றி விசா ரணையின் போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது நீதி மன்றத் தீர்ப்பு வெளியாகும் முறையை அவர்கள் உதாரணமாக சுட்டிக் காட்டினார்கள்.

அதற்கு அந்தியர்ஜூனாவும், சொலி சிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிர மணியமும் பதில் அளிக்கையில்,

விசாரணை அறிக்கை முதலில் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும், பின்னர் அவர் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடுவார் என்றும் தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் கூறுகையில்,

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளியாகாமல் பாதுகாக்க வகை இல்லை என்றார். அதற்கு நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் நடத்தும் முன்பு அதில் உள்ள விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க முடி யுமா? என்று கேள்வியெழுப்பினார் கள்.

No comments:

Post a Comment