தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என கோத்தகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
மேலும் பேசிய திருச்சி சிவா,
தி.மு.க தேர்தல் கட்சியல்ல. இது சமுதாய சீர்திருத்த இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம்தான் திமுக. அதேநேரம் வெற்றி பெற்ற கட்சி கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை தூக்கி வீசாமல் அதனை செம்மைப் படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் செய்த நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
தற்போது முக்கிய பிரச்னையாக இருக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை மாணவர்கள் பயன்பெற அமல்படுத்த வேண்டும். கொடநாடு அருகில் உள்ள அண்ணாநகர், காமராஜர்நகர் பொதுமக்களுக்கு நடை பாதை திறந்து கொடுக்கவேண்டும் என்றார்.
தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான் ஜெயலலிதாவின் சாதனையா? - கே.என்.நேரு :
லால்குடியில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்யூமான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: இவ்வாறு அவர் பேசினார். சமச்சீர் கல்வி அவசியம் - முல்லைவேந்தன் : எதிர்கால சந்ததியினருக்கு சமச்சீர் கல்வி அவசியம் அதை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் பேசினார். இதை கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக நீக்க முயற்சிக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முடிவு வருத் தத்தக்கது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், மேல் முறையீடு செய்வது தவறு. மாணவர்களின் நலன் கருதி உடன் சமச்சீர் கல்வித்திடத்தை கொண்டு எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல வழிகாட்ட வேண்டும் என்றார். சமச்சீர் கல்வி விவகாரத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீது மாணவ, மாணவிகளிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் எம்.எல்.ஏ. பி.மூர்த்தி தெரிவித்தார். திருப்பரங்குன்றம் நகர் தி.மு.க. சார்பில் உயர்நிலை செயல்திட்ட தீர்மான விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களை சந்தித்த போது பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களால் பயன்பெறாதவர்கள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கினோம். 6வது முறையாக கருணாநிதி முதல் அமைச்சராக வர வேண்டும் என்று கட்சியினரிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நிறைவேறாமல் போனது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் சமச்சீர் கல்வி விவகாரத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இன்னும் போக போக அ.தி.மு.க. ஆட்சி மீது பொது மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கும் என்றார்.
தி.மு.க ஆட்சி காலத்தில்தான் லால்குடி தொகுதியில் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. தி.மு.க ஆட்சி காலத்தில் தான் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. தற்போது அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையா?
தி.மு.க உயர்மட்ட செயல்குழு கூட்ட தீர்மானங்களை விளக்கியும், நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஆண்டிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேசியதாவது:
தி.மு.க. பகுத்தறிவால் உதயமான கட்சி. பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சி. நடந்த முடிந்த தேர்தல் தோல்வி என்பது ஒரு விபத்து தான். நிரந்தரம் அல்ல. பெரியார், அண்ணா கண்ட கனவுகளை நனவாக்கி ஓய்வறியா உழைப்பாளியாக 88 வயதிலும் மக்கள் பணியாற்றும் கருணாநிதியின் மூளையில் உதித்தது தான் சமச்சீர் கல்வி திட்டம்.
ஏழை, பணக்காரர், ஜாதி மத பேதங்களை தவிர்த்து அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், படித்த நிபுணர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு அமலுக்கு வந்ததுதான் சமச்சீர் கல்வி.
தி.மு.க. ஆட்சியில் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் பயனடையாமல் இருந்து இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பயனமடையவில்லை என்று சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். அரசு துறையில் ஏராளமானோருக்கு வேலை கிடைத்து இருக்கிறது. அதற்காக ஒரு ரூபாய் கூட லஞ்சமாக பணம் வாங்கவில்லை.
This comment has been removed by the author.
ReplyDeleteStay updated with latest news onlineclick here
ReplyDelete