கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, June 12, 2011

உயர்நிலை குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டங்கள் கோவை, ஈரோடு கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்


தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானங் கள் விளக்கப் பொதுக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. வரும் 19ஆம் தேதி கோவையிலும், 20ஆம் தேதி ஈரோட் டிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

இது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் 11.06.2011 அன்று வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் கடந்த 10ஆம் தேதி சென்னை அண்ணா அறி வாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவில் மேற் கொள்ளப்பட்ட முடி வின் அடிப்படையில், அக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை விளக்கி மாநில மெங்கும் பொதுக்கூட் டங்கள் மற்றும் கருத்த ரங்குகள் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டு உள்ளது.

வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து பகுதி, நகர, ஒன்றிய, பேரூர்க் கழக செயலாளர்கள் உயர்நிலை செயல்திட் டக் குழு தீர்மான விளக் கக் கூட்டங்களை நடத் திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வரும் 19ஆம் தேதி கோவையிலும், 20ஆம் தேதி ஈரோட்டிலும் நடை பெறும் தி.மு.க. உயர் நிலை செயல்திட்டக் குழு தீர்மானங்கள் விளக் கப் பொதுக்கூட்டங் களில் தி.மு.க. பொருளா ளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

20ஆம் தேதி விழுப் புரத்திலும், 21ஆம் தேதி கடலூரிலும் நடைபெ றும் பொதுக்கூட்டங் களில் முன்னாள் அமைச் சர் துரைமுருகன் எம். எல்.ஏ. கலந்து கொள் கிறார். 22ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடக் கும் பொதுக்கூட்டத் தில் முன்னாள் அமைச் சர் சற்குணபாண்டியன் பங்கேற்கிறார். 21ஆம் தேதி வேலூரிலும், 22 ஆம் தேதி தென்சென் னையிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கலந்து கொள்கிறார். 20ஆம் தேதி திருவண்ணாமலை யில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் புலவர் இந் திரகுமாரி பங்கேற்கிறார்.

23ம் தேதி மதுரை புறநகரில் கோவி. செழியன் எம்எல்ஏ தலைமையிலும் தேனியில் தென்னவன் தலைமையிலும் திண்டுக் கல்லில் ரகுமான் கான் தலைமையிலும், ராமநாத புரத்தில் செல்வகணபதி எம்பி., தலைமையிலும்
24ம் தேதி மதுரை மாநகரில் முனைவர் கோவி. செழியன் எம்எல்ஏ தலைமை யிலும் சிவகங்கை யில் டிஎம் செல்வகணபதி தலைமை யிலும் , விருதுநகரில்முல்லை வேந்தன் தலைமையிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள் ளன.

இதே போல், 23ம் தேதி திருப்பூரில் தமிழச்சி தங்கபாண்டியன், 24ம் தேதி நீலகிரியில் நெல்லிக்குப்பம் புகழேந்தி தலைமையிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment