கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 9, 2011

தி.முக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடுகிறது


திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கருணாநிதி தலைமையில் 10.06.2011 அன்று அவசரமாக கூடுகிறது.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் வருகிற 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தலைமை தாங்குகிறார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.
இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு : கனிமொழி ஜாமீன் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் கோரி, திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் ஜாமீன் கோரி, டெல்லி சி,.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி அஜித் பரிஹோக் 08.06.2011 அன்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில், �இவர்களுக்கு அரசியல் பலமும், பண பலமும் இருக்கிறது. இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது என்ற வாதத்தை நிராகரிக்க முடியாது. எனவே, மனுதாரர்களை இப்போது ஜாமீனில் விடுவிப்பது சரியாக இருக்காது என்று கருதுகிறேன்� என்று கூறி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
நீதிமன்றத்திற்கு வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுகையில், �ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்வோம்� என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment