கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 1, 2011

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக தலைவர் கருணாநிதி 5ம் தேதி திருவாரூர் செல்கிறார்


திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி வரும் 5ம் தேதி திருவாரூர் வருகிறார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, 55,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை பெற்றுத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணி சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் 5ம் தேதி மாலை 6 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன் நடைபெறுகிறது.
இதில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நன்றி தெரிவித்து பேசுகிறார். இதற்காக அவர், 5ம் தேதி காலை கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் வருகிறார். அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு, காலை 10 மணிக்கு காட்டூரில் உள்ள தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர், மாலை 6 மணிக்கு தெற்குவீதியில் நடக்கும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, இளைஞரணி, மகளிரணி, அனைத்து சார்பு அணியினரும், கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment