* சொத்து குவிப்பு வழக்கு: வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
* பிறந்தநாள் பரிசு வழக்கு: 1992ல் ஜெயலலிதா பிறந்தநாளின்போது அவருக்கு 2 கோடி பணம் வந்தது. இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
* வருமானவரி வழக்கு: 1995&96 மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கும், கார் உள்ளிட்ட சொத்துக்கள் மீதான செல்வ வரி தாக்கல் செய்யாத வழக்கும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
* எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்யாத வழக்குகளும் தனித்தனியாக நிலுவையில் உள்ளன.
No comments:
Post a Comment