About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Sunday, June 26, 2011
கல்விக்கண் கட்டப்பட்டுள்ளது: கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் தலைமைக் கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், டூவிபுரம் 3வது தெரு சந்திப்பில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கீதாஜீவன் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது கல்விக்கண் கட்டப்பட்டுள்ளது. தலைசிறந்த கல்வியாளர்களால் 2 ஆண்டு கால ஆய்வுக்கு பின் தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். பள்ளிகளில் பாடம் நடத்த தடை செய்துள்ளார்கள். ரூ.200 கோடியில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை எளிதாக தூக்கி எரிந்து விட்டார்கள். தற்போது ரூ.400 கோடியில் புதிதாக புத்தகம் அச்சடிக்கிறார்கள். மக்கள் இதை கேள்வி கேட்க வேண்டும். கடந்த 2006 ம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிட்டபோது தொகுதி முழுவதும் சாலை என்பது பள்ளம் மேடுகளாக இருந்தது. பல இடங்களில் படகில் செல்வது போல் தண்ணீரும், கழிவு நீரும் தேங்கி கிடந்தது.
ஆனால் இன்று தொகுதி முழுவதும் தரமான சாலைகளை அமைத்து கொடுத்துள்ளேன். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றியுள்ளேன். பக்கிள் ஓடையை சீரமைத்துள்ளேன். மாநகர பகுதிகளில் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி உள்ளேன். இதுபோல் நூற்றுக்கணக்கான திட்டங்களையும் நிறைவேற்றியும், மாநில அரசின் திட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனாலும் மக்கள் முழுமையாக வாக்களிக்க தவறிவிட்டனர். அதே நேரத்தில் தொகுதியில் 63 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளவர்கள் இருக்கிறீர்கள் என்பதையும், மாநில அளவில் தி.மு.க.வுக்கு 1 கோடியே 45 லட்சம் பேர் வாக்களித்தவர்கள் இருக்கிறீர்கள் என்பதையும் நினைத்து மகிழ்கிறோம். எனவே எப்போதும் போல் மக்கள் பணி ஆற்றுவோம். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முயன்று போராடுவோம். எனவே தொகுதிக்கு தி.மு.க. செய்த சாதனைகளை மறக்காமல் வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு துணை நிற்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment