சமச்சீர் கல்விக்காக தமிழக அரசு நியமித்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளால் அந்த குழுவின் மீது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
சமச்சீர் கல்வி பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆரோக்கியமாக இல்லை. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல். 200 கோடி ரூபாய் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி குறித்த தமிழக அரசு அமைத்துள்ள ஆய்வுக் குழுவில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் இடம்பெற்றிருப்பது அக்கல்வி குறித்த நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் சிதைக்கும் செயல் என்றார்.
இலங்கை மீது பொருளாதார தடை: தமிழக அரசின் தீர்மானம் கண்துடைப்பு - வைகோ :
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தாமல், தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வெறும் கண்துடைப்பு என்று வைகோ கூறினார். இந்திய அரசு பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டதை கண்டித்து, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போறீர்களா இல்லையா என்று தமிழக அரசு கேட்க வேண்டும். இதையெல்லாம் கேட்காமல் பொத்தாம் பொதுவாக பொருளாதா தடை என்றால் அது உண்மையாகவே சிங்கள அரசுக்கு ஒரு பொருளதார நெருக்கடியை உண்டாக்குகின்ற அனுகுமுறையாக இருக்காது என்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
பொருளாதார தடை கொண்டுவரவேண்டுமானால் இந்திய அரசு பத்து நாட்களுக்கு முன்னால் இலங்கையோடு போட்ட பொருளாதர ஒப்பந்தங்கள், வர்த்த ஒப்பந்தங்களையும் இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment