திமுக மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களின் நலனை பாதிக்கின்ற விதமாக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதாக கூறி, ரூ.210 கோடியை பாழாக்கியது. தொடர்ந்து 400 பொறியியல் கல்லூரிகளை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பதாக கூறியுள்ளது. இது கண்டிக்கதக்கது.
இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மாணவன் கூட சிறு பணிகளுக்காக சென்னைக்கு வர வேண்டும். இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிரமம். இதனால் பல்கலைக்கழக பணிகளும் கூடுதலாகி, நிர்வாக பளு ஏற்படும். பணியில் தாமதமும் ஏற்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment