கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, June 12, 2011

ஆட்சியிலே இல்லாத காலத்தில்தான் தாடகைக்கு ராமன் புத்தி கற்பித்தான் : கலைஞர்


திமுக தலைவர் கருணாநிதி 12.06.2011 அன்று கோவை ராம்குமாரின் மகள் பத்மப்ரிதிகா-திருப்பூர் சம்பத்குமார் மகன் சஞ்சய்குமார் திருமணத்தை நடத்தி வைத்தார்.


இத்திருமண விழாவில் அவர் பேசும்போது,

’’ இங்கே பேசிய போது தேர்தலிலே நாம் வெற்றியடையவில்லை என்று சொன்னார்கள்.


நாம் இப்போது ஆட்சியிலே இல்லை என்று கூட நம்முடைய நண்பர்கள் சிலர் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள். ஆட்சியிலே இல்லா விட்டாலும், நம்முடைய குறிக்கோளை நாம் இழந்து விடமாட்டோம்.

புராணத்தில், ராமாயணத்தில் கூட 14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலோ இல்லை, அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆகவே ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக்களையவும், தடுத்து நிறுத்தவும் நாம் முயல வேண்டும் நம்மால் முடியும். அப்படி முடிகின்ற அந்த காரியத்தை இன்றைய தினம் மணமக்களாக வீற்றிருக்கின்ற அருமைச் செல்வங்கள், பத்மப்பிரிதிகாவும், சஞ்சய் குமாரும் நெஞ்சிலே ஏந்திக் கொண்டு தங்களுடைய குடும்பத்தை நடத்த வேண்டும்.

குடும்பம் நடத்துவதிலே சிக்கல்கள் தோன்றலாம். இங்கே நம்முடைய குஷ்பூ சொன்னதைப் போல சிறு சிறு ஊடல்கள், சிறு சிறு தகராறுகள், பிரச்சினைகள் இவைகள் எல்லாம் குடும்பத்தின் பலத்தை வலுப்படுத்தக் கூடியதாகத் தான் இருக்கும். அப்படி குடும்பத்திற்கு இல்லற வாழ்க்கைக்கு வலு சேர்க்கின்ற வகையிலே அபிப்பிராய பேதங்கள் வந்தால், கருத்து வேறுபாடுகள் வந்தால் அதில் ஒன்றும் தவறில்லை.

அத்தகைய கருத்து வேறுபாடுகள் புதிய புதிய சிந்தனைகளுக்கு அறிவுத் தேடல்களுக்கு இடம் கொடுக்கும் என்பதையும் மறந்து விடாமல் மண மக்களை வாழ்ந்திட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்

ஒரு குழுவில் நண்பர்கள் மத்தியில் ஜோக்கர்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில ஜோக்கர்கள் அரசியலிலும், கலைத்துறையிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.


அப்படிப்பட்ட ஜோக்கர்கள் யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளிலே எடுத்துக்காட்டாகக் கூட யாராலும் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

தமிழ் என்று சொல்வதற்கு இப்போது சிலருக்கு தயக்கம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் தமிழ் வாழ்க என்று அரசியலில் என்னுடைய நிலையை உருவாக்கிக் கொண்டவன்தான் நான். என்னுடைய பதினான்காவது வயதில் தமிழ் வாழ்க என்ற முழக்கத்தோடு, தமிழ்க் கொடியைப் பிடித்து வளர்ந்தவன்-பெரியாரின் நிழலிலே இருந்தவன். அண்ணாவினுடைய கரங்களைப்பிடித்து வளர்ந்தவன்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழ் என்று சொல்லவே பல பேர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் தமிழ் வாழ்ந்தால், இங்கே தம்பி செல்வம் குறிப்பிட்டதைப் போல, தமிழ் இன உணர்வு வளரும்.


தமிழ் இன உணர்வு வளர்ந்தால், திராவிட உணர்வு செழிக்கும். இந்த இரண்டு உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லாமல் செய்ய வேண்டுமென்று ஒருசாரார் முயன்று வருகின்ற நேரத்தில் ஆத்திகத்திலே பற்று கொண்டவர்கள் கூட, நாத்திகராக தங்களைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் கூட, தமிழ் வாழவும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரம் இவைகள் வென்றிடவும், பாடுபட வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றது. நான் அத்தகைய அழைப்பை தமிழர்கள் என்று யார் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இது போன்ற விழாக்களில் விடுக்க விரும்புகிறேன். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய கலாச்சாரம் வாழும். தமிழர்களுடைய கலாச்சாரம் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய தன்மானம் வாழும். தன்மானம் பாதுகாக்கப்படும். அப்படிப்பட்ட தன்மானத்தைப் பாதுகாக்க, நம்முடைய இன உணர்வுகளுக்கு இடம் அளித்து அந்த இன உணர்வுக்கு வெற்றியைத் தேட நாமெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்’’ என்று பேசினார்.

No comments:

Post a Comment