சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆன நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார்.
கடந்த ஏப்ரல் 29ம் தேதி, நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை இசபெல்லா மருத்துவமனையிலும், பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து, சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து 15.06.2011 அன்று டிஸ்சார்ஜ் ஆகி, வாடகை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் 16.06.2011 அன்று திமுக தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டார். அப்போது, தனது உடல்நலம் குறித்து கருணாநிதியிடம் விவரித்தார். ரஜினி உடல்நலம் தேறி வருவது பற்றி அறிந்த கருணாநிதி மகிழ்ச்சி அடைந்து, விரைவில் ரஜினி சென்னை திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார்.
கருணாநிதியிடம் ரஜினி பேசியபோது, “நீங்கள் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகள், மேடு பள்ளங்களை எல்லாம் சந்தித்தவர். உங்கள் உடல்நலம் பேணுவது தான் முக்கியம். எது பற்றியும் பெரிதாக கருதாமல் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இத்தகவலை, திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை, திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment