கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 7, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. பாரபட்சம் காட்டுகிறது! - 2011 ஜுன் 8 நாளிட்ட இந்திய டுடே


2011 ஜுன் 8 நாளிட்ட இந்திய டுடே இதழில் பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் எழுதியிருக்கின்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன

நீதி என்பது ஒரு தீர்ப்பு மாத்திரமில்லை. அது ஒரு நீண்டகால நடவடிக்கையும் கூட. அந்த நடவடிக்கையில் தவறிருந்தால் தீர்ப்பு களங்கமடைகிறது. நீதி என்பது ஒரு அடிப்படை கொள்கையைக் கொண்டது. நீங்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரையிலும், நீங்கள் குற்றமற்றவர்தான். வழக்கறிஞர்களை அமர்த்தி வாதாட முடியாதவர்களுக்காகத்தான் இலவச சட்ட உதவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க முடியும். காவல்துறையினரின் குற்றப்பத் திரிகையே விசாரணையின் ஆரம்பம்தான்; முடிவல்ல.

தி.மு.க. எம்.பி கனிமொழி சிறையில் குற்றம் சாட்டப்பட்டவராகத்தான் இருக்கிறாரே ஒழிய குற்றவாளியாக இல்லை. இந்த இரண்டுக்கு மிடையே கடல் அளவு வித்தியாசம் இருக்கிறது. சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சட்டம் அனுமதிக்கப் படும் வரையிலும் நீதிபதிகள் அவரைச் சிறைக்கு அனுப்புவார்கள். ஆனால் அந்த முடிவை எடுக்கும்வரை அவர் அப்பாவிதான். இந்தக் கால இடைவெளியில் நீதிமன்றக் காவல் என்பது குறைந்தபட்சமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் சி.பி.ஐ கணக்கற்ற நாட்களுக்கு நீதிமன்றக் காவலைக் கேட்கிறது. பெற்றும் விடுகிறது. இது அநீதி.

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப் பவர்கள் விசாரணை முடிந்தும்கூட கால வரையறையற்று ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும் என்று சி.பி.ஐ. விரும்புகிறது. இதற்கு நீதிமன்றம் இரண்டு காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறது. அதிலொன்று, “ வழக்கின் தீவிரத்தன்மை ”. இது சரி கிடையாது. குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை முக்கியமான தாகக் கருதமுடியாது. குற்றம் இனிமேல்தான் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் என்னதான் நடந்தது என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கருத்தாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், அரசுக்கு இழப்பு இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். விரும்ப வேண்டும். ஆனால் இதை அடைய சட்டச் செயல்பாடுகளைச் சீர்குலைக்க வேண்டுமா? சி.பி.ஐ. பாரபட்சமாக நடக்கிறது. 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கிய முடிவில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. பொங்கி எழுந்திருக்கிற மக்களைச் சமாதானப்படுத்த பலியாடாக்கப்பட்டிருக்கிறது அவர்களின் கூட்டணி தி.மு.க.

ஜாமீன் மறுப்பதற்கு சொல்லப்படும் இரண்டாவது காரணம், குற்றம் சாட்டப்பட்டி ருப்பவர் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் அல்லது முக்கிய சாட்சிகளை நிர்பந்திப்பார். இது குறித்த வேலைகள் ஆரம்பித்த பிறகு, பல வாரங்களுக்கு ஆ.இராசாவும், கனிமொழியும் சும்மாதானிருந்தார்கள். அப்போது கலைக்க அல்லது நிர்பந்தம் செய்யவில்லை என்றால், இப்போது எப்படிச் செய்வார்கள்? இது வலுவற்ற சால்ஜாப்பு.

இந்திய நீதிமன்றங்கள் ஜாமீன் உரிமையை மதிக்கின்றன. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு அனுப்பிய “ பிரபல 50 ” தேடப்படும் “ பயங்கரவாதிகள் ” லிஸ்டில் உள்ள வஸ்லல் கமர் கானுக்கு ஜாமீன் தரப்பட்டி ருக்கிறது. ஊழலைவிட பயங்கரவாதம் அதிக கவலையளிக்கக் கூடிய வி­யம். இராசாவையோ, கனிமொழியையோ யாரும் பயங்கரவாதிகள் என்று சொல்லவில்லை. இவர்களுக்கு ஜாமீன் தராமல் பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஏன் ஜாமீன் தரப்படுகிறது !

எங்குமே மிக முக்கிய நபர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். காவல்துறையினர் அரிதாகத்தான் கனிவாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் சட்டம், குற்றம் சாட்டப்பட்டரின் உரிமைகளை மதிக்கிறது. ஐ.எம்.எஃப்.பின் முன்னாள் இயக்குநர் டாம்னிக் ஸ்ட்ராஸ்கான் விமானத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். ஹோட்டல் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது உள்பட அவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவர் ஜாமீனில் விடப்பட்டார். சமீபத்தில் அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் நாகரத்தினம் நிதி ஊழலின் அடையாளமாகச் சொல்லப்பட்டார். ஆனால் தீர்ப்பு வருவதற்கு முன்பாக நியூயார்க் போலீஸ் அவரை ஜெயிலில் அடைக்கவில்லை.


ஜாமீனே கிடைக்காத ஒரு சிறைச்சாலை இருக்கிறது. அது குவான்டனமோ. பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படுபவர்களை அடைக்க அமெரிக்கா விரும்பும் சிறைக்கூடம். நல்ல வேளையாக நாம் அந்த நிலையை எட்டிவிடவில்லை. ஆனால் நரகம் உள்ளிட்ட பல சேருமிடங்களுக்கான பாதைகள் நல்லெண்ணத் துடன் போடப்பட வேண்டும்.

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

No comments:

Post a Comment