கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 4, 2011

88வது பிறந்த நாள் கொண்டாட்டம் : பெரியார், அண்ணா நினைவிடங்களில் திமுக தலைவர் கருணாநிதி மரியாதை




88வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார், அண்ணா நினைவிடங்களில் கருணாநிதி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு 03.06.2011 அன்று 88வது பிறந்த நாள். �பிறந்த நாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை. எனவே, நேரில் வந்து வாழ்த்து கூறுவதை கட்சித் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்� என்று கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனாலும், அதிகாலையிலேயே ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்க, சால்வைகளுடன் கோபாலபுரம் வந்திருந்தனர். யாரையும் கருணாநிதி சந்திக்காததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
இந்நிலையில், 03.06.2011 அன்று அதிகாலையில் எழுந்த கருணாநிதி, குளித்துவிட்டு பெற்றோர் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை திமுக முன்னணியினர் வரவேற்றனர். அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, துரைமுருகன், நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன், மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, வி.எஸ்.பாபு, இ.ஏ.பி. சிவாஜி, கருப்பசாமி பாண்டியன், சி.சண்முகம், வி.விஸ்வநாதன், மேயர் மா.சுப்பிரமணியம், வின்சென்ட் சின்னதுரை, செல்லமுத்து, பொன்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்தனர்.
அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு கருணாநிதியிடம், தொண்டர்களுக்கு பிறந்த நாள் செய்தியாக என்ன கூறுகிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, �சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள், �கூடா நட்பு கேடாய் முடியும்� என்ற பொன்மொழியை மறந்து விடாமல் பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


கருணாநிதி பிறந்த நாளை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடினர். திமுக கொடி ஏற்றி வைத்து இனிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினர். கண் தானம், ரத்த தான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
திமுக மாணவர் அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் ரத்ததான முகாம் நடந்தது. 200 பேர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, வி.எஸ்.பாபு, மேயர் மா.சுப்பிரமணியம், துணைச் செயலாளர்கள் கணேஷ்குமார், பூவை ஜெரால்டு, மகிழன், அன்பழகன், பூச்சி முருகன், தாயகம் கவி, சதீஷ்குமார், எஸ்.எம்.கே.வெங்கடேசன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மகளிர் அணி சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்தில் அனாதை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சற்குண பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் கயல்விழி, சங்கரி நாராயணன், காயத்ரி சீனிவாசன், நூர்ஜகான் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருணாநிதிக்கு பர்னாலா வாழ்த்து :

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு கவர்னர் பர்னாலா நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துச் செய்தியும், பூங்கொத்தும் அதிகாரி மூலம் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.

கருணாநிதி பிறந்த நாள் - மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி :

கருணாநிதியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. :

இதுகுறித்து, திமுக மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை:
1969 முதல் 2011 வரை கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் மாணவர் நலனுக்காக செய்த சாதனைகள், திராவிட& ஆரியப் போர், அன்றும் இன்றும், கருணாநிதியின் படைப்பாற்றல் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். அதை திமுக மாணவர் அணி, �கட்டுரைப் போட்டி�, அண்ணா அறிவாலயம், திமுக தலைமை நிலையம், தேனாம்பேட்டை, சென்னை& 600 018� என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment