திமுக & காங்கிரஸ் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று கருணாநிதி கூறினார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு 10.06.2011 அன்று கருணாநிதி அளித்த பேட்டி:
மத்திய அரசு சிபிஐ&யை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறதா?
ஆயுதமாக இருக்கலாம். அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.
மத்திய அரசு அலட்சியத்தால் கனிமொழி கைது செய்யப்பட்டார் என்று திருவாரூரில் பேசினீர்களே?
திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.
கூடா நட்பு என்று கூறினீர்களே?
உங்களில் ஒரு சிலரோடு இருக்கும் நட்பாக கூட இருக்கலாம் அல்லவா?
எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் உங்கள் கூட்டணியில் சிக்கல் இல்லை, பிரச்சினை இல்லை என்று கூறுவீர்களா?
நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?
டெல்லியில் குலாம் நபி ஆசாத் உங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2 ஜி வழக்கு நடப்பதால் தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் நினைப்பவர்களும் அல்ல, செயல்படுகிறவர்களும் அல்ல.
உங்கள் கட்சியிலே உள்ள பெரும்பான்மையான தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடரக் கூடாது என்று விரும்புகிறார்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற என்ன காரணம்?.
நாங்கள் எங்களின் பொதுக் குழுவைக் கூட்டும்போது தான் தி.மு.க. தோழர்கள் இது போன்ற கட்சி உடன்பாடுகள், தோழமைகள் பற்றி கருத்துக்களைச் சொல்வது வழக்கம். இது எங்களுடைய அன்றாட நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கின்ற விவாதித்து முடிவெடுக்கின்ற ஒரு குழு. இந்தக் குழுவில் தோழமைக் கட்சிகள் யார் யார் என்பது பற்றி யெல்லாம் விரிவாகப் பேச இயலாது.
திமுக காங்கிரஸ் உடன் கொண்ட உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவை பொதுக்குழுவில் எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?
நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்விலேயே தெரிகிறது.
காங்கிரஸ் உறவு தொடரவேண்டுமா என்ற கேள்வி இருக்கிறதே? அதற்கு என்ன பதில்.
நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
காங்கிரசுடன் உள்ள கூட்டணியில் எந்த பிரச்னையும், சிக்கலும் இல்லை என்று சொல்கிறீர்களா?
நிச்சயமாக சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதம் உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு சிலர் முடிவு செய்து, அதை இங்கு வந்து கேட்கிறீர்கள்.
ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் தான் காங்கிரஸ் தோற்றது என்று அவர்களது அதிகாரபூர்வ ஏட்டில் எழுதியிருக்கிறார்களே?
இந்த பிரச்னையை பூதாகரமாக சில சுயநலக்காரர்கள், பொறாமைக்காரர்கள் ஊதி விட்ட காரணத்தால் அதை வைத்துக் கொண்டு எழுதியிருப்பார்கள்.
அப்படியானால், திமுக தோல்விக்கு என்ன காரணம் ?
முக்கிய காரணம், ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சி தான். பாஜகவுடன் நீங்கள் செல்லப்போவதாக சொல்கிறார்களே?அது பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கும் சாமியாருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று கூட சொல்வீர்கள்.
அடுத்து வர இருக்கும் குற்றப் பத்திரிகையில் தயாநிதிமாறன் பெயர் இடம் பெறப்போவதாக செய்தி வந்துள்ளதே?
நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால், அது உண்மையா? இல்லையா? என்பதை சிபிஐ தான் சொல்ல வேண்டும். இதை, 6 ஆண்டுகள் ஆகிவிட்ட விஷயம் என்று சிபிஐ கூறியிருக்கிறது.
தயாநிதிமாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே?
ராஜினாமா செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் எப்போதாவது சொல்வார்களா?
2ஜி பிரச்னையில் ராஜாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதிமாறனை ஆதரித்து கூறவில்லையே?
நான் சொல்லவேண்டிய அவசியமில்லை. தயாநிதிமாறனே சொல்வார் என்ற எண்ணத்தோடுதான் பதில் சொன்னே தவிர நீங்கள் கலகமூட்டுவதுபோல, தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.
காங்கிரஸ் திமுகவை என்றும் மதித்ததில்லை என்று ஏற்கனவே கூறி இருந்தீர்கள். �கூடா நட்பு� என்று இப்போது கூறி இருக்கிறீர்கள்!
ஒவ்வொரு நேரத்திலும் ஒரு சம்பவம் பற்றி கூறவேண்டிய சூழ்நிலையில், கூறியிருப்பேன். அதையே தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று கூறமுடியாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உங்கள் சுயமரியாதை காக்கப்படுகிறதா?
எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவில் போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.
இந்த பிரச்னையில் காங்கிரஸ் உதவவில்லை என்று உங்களுக்கு வருத்தமா?
இல்லை. எனக்கு வருத்தம் வரவேண்டும் என்று நீங்கள்தான் படாத பாடு படுகிறீர்கள்.
ராஜா, கனிமொழி சிறையில் இருக்க காங்கிரஸ் தான் காரணம் என்று தொண்டர்கள் பேசுகிறார்களே?
எந்த தொண்டர்கள்?
போபர்ஸ் பிரச்னையிலும், 2ஜி பிரச்னையிலும் சிபிஐயின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு பிரச்னையையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பது புதிதல்ல.
உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்திருக்கிறார்களே?
இது பற்றி கேட்கிறீர்களே, சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீர்ப்பு கூறியிருக்கிறார்கள். அதை பற்றி எல்லாம் கேட்கமாட்டீர்களா? அந்த தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. நீங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்துவீர்களா?
இப்போது கூட்டம் நடத்துகிறோம். இதன்பிறகு பொதுக் குழுவை கூட்டுவோம். அதில் போராட்டம் பற்றி தீர்மானிப்போம்.சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்திலே உங்கள் கட்சிதான் எதிர்க்கட்சி?
உண்மையைச் சொன்னதற்கு நன்றி.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?
நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.
உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள்?
பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.வுடனான கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தாது - காங்கிரஸ்:
கலைஞர் பேட்டி குறித்து டெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி.யிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில்; "ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது'' என்றார். இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகள். நீண்ட காலமாக இந்த கூட்டணி இருந்து வருகிறது. இப்போது உள்ளதை போன்றே இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.
No comments:
Post a Comment