கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 2, 2011

சமச்சீர் கல்வி புத்தகங்களை 8ம் தேதி வரை அழிக்க மாட்டோம் - தமிழக அரசு ஐகோர்ட்டில் உத்தரவாதம்


சமச்சீர் கல்வி புத்தகங்களை வரும் 8ம் தேதி வரை அழிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் ஜே.எல்.பாண்டியன், வக்கீல் ஆர்.சுரேஷ், பெற்றோர் சார்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் புதிய மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், அக்பர் அலி முன்பு 01.06.2011 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வக்கீல்கள் பிரசாத், ஆர்.காந்தி, ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, “ஏற்கனவே ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சிட்டப்பட்டுள்ளது. தற்போது, பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிய புத்தகங்கள் அச்சிட தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது. இதனால் 9 கோடி புத்தகங்கள் அழிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் பணம்தான் வீணாகிறது. சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், “சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது. அரசு தீவிர ஆலோசனை நடத்திய பிறகுதான் இதில் முடிவு எடுக்கும். இந்த வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. சமச்சீர் கல்வியை ஆதரித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, கடந்த வாரம் விடுமுறைக்கால நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் விசாரித்து, வரும் 8ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். எனவே, இந்த வழக்குகளையும் அன்றைக்கு தள்ளிவைக்க வேண்டும். இந்த வழக்குகளில் விரிவாக பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். ஜூன் 15ம் தேதிக்குள் புதிய புத்தகங்கள் கிடைக்கும்” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டால் 9 கோடி புத்தகங்கள் வீணாகும். அதை என்ன செய்யப் போகிறீர்கள்? புதிய புத்தகம் அச்சிட்டால் எவ்வளவு செலவாகும் என்பது பற்றி அரசு நாளை பதில் கூற வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
பின்னர், நேற்று மாலை 5 மணிக்கு அதே நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் நவனீதகிருஷ்ணன் ஆஜராகி, கடந்த அரசு அச்சடித்த சமச்சீர் கல்வி புத்தகங்களை வரும் 8ம் தேதி வரை அழிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த உத்தரவாதத்தை அரசு செயலாளர் சபீதா ஐ.ஏ.எஸ். எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார். என்று அந்த உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை நீதிப திகள் ஏற்றுக்கொண்டனர்.அப்போது வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் குறுக்கிட்டு, �புதிய புத்தகங்கள் அச்சடிக்க தடை விதிக்க வேண்டும்� என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், “சமச்சீர் கல்வி வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு அமைந்தால், இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். அதற்கு புத்தகங்கள் தயாராக உள்ளது, ஒருவேளை இதில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தால், அப்போது குறுகிய காலத்துக்குள் புதிய புத்தகங்கள் அச்சடிக்க முடியாது. எனவே, புதிய புத்தகங்கள் அச்சடிக்க தடை விதிக்க முடியாது. அரசு அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொள்கிறோம். இந்த வழக்கில் இறுதி விசாரணை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment