About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Thursday, June 9, 2011
சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை - சட்டமன்றத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலின் பேட்டி
சட்டமன்றத்தில் இருக் கைகள் ஒதுக்கியுள்ள தில் உள்ள குறை பாடுகளை தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க. ஸ்டா லின் சுட்டிக் காட் டினார்.
இன்று (9.6.2011) காலை சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே தி.மு.க. சட்ட மன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:
நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் ஒரு முக்கியமான தீர் மானம் நிறைவேற்றப் பட்டது. இலங்கை அரசை இனப்படு கொலை போர்க் குற்ற வாளி என்றும், அந்த நாட்டின் மீது பொரு ளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தீர் மானம் கொண்டுவரப் பட்டது. தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் இதனை ஆதரித்து வர வேற்று நிறைவேற்றப் பட்டது. தி.மு.க. சார்பில் எங்கள் கட்சியின் துணைத் தலைவர் துரைமுருகன் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார். அதன்பிறகு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடந்த தி.மு.க. ஆட்சியை யும், தலைவர் கலைஞ ரையும் கேலியும் கிண்ட லும் செய்து பேசியிருக் கிறார். அதற்கு துரை முருகன் ஆட்சேபணை செய்துள்ளார். சில விளக்கங்களை அளிக்க சபாநாயகரிடம்கூட அனுமதி கேட்டிருந்தார். அதற்கு விஜயகாந்த் பேசிய பிறகு வாய்ப்பு தருகிறேன் என்று கூறிய சபாநாயகர் கடைசியாக வாய்ப்பு தரவில்லை. இதனை கண்டித்து தி.மு.க.வினர் நேற்றைய தினம் வெளிநடப்பு செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வெளிநடப்பு செய்கின்ற அந்த நேரத் தில் கூட கேலியும் கிண் டலும் செய்து கூச்சல் போடுவதும், நுழைவு வாயிலில் நின்று வழி மறிப்பதும், வேட்டியை மடித்துக்கொண்டு தாக்க முற்படுகின்ற முயற்சிகளிலும் ஈடுபட் டார்கள். எங்களால் பாதுகாப்பாக வெளியே வரமுடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பான சூழ் நிலை சபையில் இல்லை. எனவே சபை முறைப் படி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் ஒரே வரி சையில் இருக்கைகளை ஒதுக்கித் தரவேண்டும் சபாநாயகரிடம் ஒரு கடிதம் கொடுத்துள் ளோம். சட்டமன்ற தி.மு.க. கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அதில் கையெழுத்திட் டுள்ளேன். இன்று காலை ஒரு பதில் கடிதம் எழுதியுள்ளார்கள். சட்டமன்ற விதிமுறை களின் அடிப்படையில் தான் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் அப்படியல்ல. பா.ம.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் எந்தக் கட்சியினை சார்ந்த உறுப்பினர்களுக்கும் ஒரு வரிசையில் தான் இருக்கைகள் ஒதுக்கப் பட்டிருந்தது என்பது எல்லோருக்கும் நன் றாகத் தெரியும். எனவே இன்னும் எங்களுக்கு ஒரே வரிசை யில் இருக்ககைளை ஒதுக்கித் தரவில்லை என்பதால் இந்த அவை யில் கலந்துகொள்ள வில்லை என்று முடி வெடுத்து புறக்கணித் துள்ளோம் என்று மு.க. ஸ்டாலின் சட்டமன்றத் திற்கு வெளியே செய்தி யாளர்களிடம் தெரிவித் தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment