கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 7, 2011

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் பயணம்


திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் 05.06.2011 அன்று நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார்.
சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணி சார்பில், திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் முன் 05.06.2011 அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார்.
இதற்காக கருணாநிதி, 04.06.2011 அன்று இரவு 11 மணிக்கு சென்னையிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் மூலம் திருவாரூர் புறப்பட்டார். இன்று காலை திருவாரூர் ரயில் நிலையம் வரும் அவருக்கு, திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர், தியாகராஜர் கோயில் சன்னதிதெருவில் உள்ள தனது இல்லத்துக்கு சென்று ஓய்வெடுக் கிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு காட்டூரில் உள்ள தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து தெற்குவீதியில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
பின்னர் அவர் இரவு 9 மணிக்கு கம்பன் எக்ஸ்பிரசில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மதிவாணன், மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்பி, நகராட்சி தலைவர் தென்னன், எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா உட்பட திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, இளைஞரணி, மகளிரணி, அனைத்து சார்பு அணியினரும், கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி வருகையையொட்டி திருவாரூர் ரயில்நிலையம், தெற்குவீதி உட்பட மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள், தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் திமுக கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment