ஸ்பெக்ட்ரம் வழக்கில், தி.மு.க. எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் 20.06.2011 அன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிறையில் உள்ள கனிமொழி எம்.பி.யை திமுக தலைவர் கருணாநிதி 21.06.2011 அன்று சந்தித்து பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதி 21.06.2011 அன்று காலையில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லி வந்தார். கலைஞருடன் மூத்த திமுக தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் உடன் வந்துள்ளனர். மாலை 5.50 மணிக்கு திகார் சிறைக்கு கருணாநிதி சென்றார். சிறையில் உள்ள கனிமொழி எம்.பி.யை அவர் சந்தித்து பேசினார். சிறை உதவி கண்காணிப்பாளர் அறையில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் 20 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர், அந்த அறைக்குள் மத்திய அமைச்சர் அழகிரி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சென்றனர். சிறிது நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சிறை காவலர்கள் அழைத்து வந்தனர். அவர்களுடன் கருணாநிதி பேசினார். இந்த சந்திப்பின்போது டி.ஆர்.பாலு எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் உடன் இருந்தனர். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது, கனிமொழியிடம் உடல் நலம் விசாரித்த கருணாநிதி, அவருக்கு தைரியம் மூட்டினார். அதற்கு, "நான் தைரியமாக இருக்கிறேன் அப்பா, நீங்கள் உங்களுடைய உடல் நிலையை கவனித்துக்கொள்ளுங்கள்," என்று கனிமொழி கூறினாராம்.
இதற்கிடையே, திகார் சிறையில் கனிமொழிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி திகார் சிறை டி.ஜி.பி தீரஜ் குமார் கூறுகையில், ‘பாதுகாப்பு காரணங்களுக்காக கனிமொழி இருக்கும் அறையே தனி செல் ஆக மாற்றப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

No comments:
Post a Comment