கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 2, 2011

2009ல் வெளியிட்டு பிஎஸ்என்எல் மறுத்த செய்தியை மீண்டும் பிரசுரித்து அவதூறு தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மன்னிப்பு கேட்க தயாநிதி மாறன் நோட்டீஸ்

தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:
‘விவீஸீவீstமீக்ஷீ
ஷிtமீணீறீs ணீ ஜிமீறீமீஜீலீஷீஸீமீ ணிஜ்நீலீணீஸீரீமீ, லிஷீஷீts ஙிஷிழிலி’
என்ற தலைப்பில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிலும், ‘தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி?’ என்ற தலைப்பில் தினமணியிலும் ஜூன் 2ம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளீர்கள். இதற்கு என் கட்சிக்காரர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள எஸ்.குருமூர்த்தி, எனது கட்சிக்காரருக்கு விரோதமாக உள்நோக்கத்துடன் செயல்படும் நபர்களில் முக்கியமானவர் ஆவார்.
இந்தக் கட்டுரையில் எனது கட்சிக்காரர் அவரது வீட்டில் 323 இணைப்புகள் கொண்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பகத்தை ஏற்படுத்தி அவரது இல்லத்திலிருந்து ரகசிய கேபிள் வழியாக சன் நெட்வொர்க் அலுவலகத்துக்கு இணைப்பு கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பகத்தை சன் டிவி தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பகம் தினகரன் நாளிதழ் அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை, உள்நோக்கம் கொண்டவை. எனது கட்சிகாரரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கற்பனையாக புனையப்பட்டவை.
இதேபோன்ற கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு தினமணி பத்திரிகையில் வெளியானது. அப்போது எனது கட்சிக்காரர் (தயாநிதி மாறன்) கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தபோது போட்கிளப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரேயொரு இணைப்புதான் கொடுக்கப்பட்டது என பிஎஸ்என்எல் விளக்கம் அளித்தது. இணைப்பு கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 2009 மார்ச் வரை 4 லட்சத்து 50 ஆயிரம் அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள அமைச்சருக்கு தகுதி இருந்தும், எனது கட்சிக்காரர் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 698 அழைப்புகளைத்தான் பயன்படுத்தினார் என பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த இணைப்புக்கான பில்லிங் தகவல்கள் மாதந்தோறும் நாடாளுமன்ற தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொது மேலாளர் வி.மீனலோசினி கடந்த 6&5&2009 அன்று எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை மேற்படி கடிதம் தெளிவாக நிரூபிக்கிறது.
இந்த தொலைபேசி இணைப்பு குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக கடந்த 25&4&2009 அன்று தினமணி பத்திரிகைக்கு எனது கட்சிக்காரர் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோன்ற குற்றச்சாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த 2009ம் ஆண்டு அமைந்தகரை பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவதூறான செய்தி வெளியிட்டதற்காக தொடரப்பட்ட வழக்கிலும், அதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கிலும் தீர்ப்பு வரும் வரை காத்திராமல் மீண்டும் அதே பொய்யான தகவல்களை கட்டுரையாக வெளியிடுவது நீதித்துறையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதுடன் மலிவான விளம்பரத்துக்காகவும் எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும்தான் என்று தெரிகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை எனது கட்சிக்காரர் திட்டவட்டமாக மறுக்கிறார். எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தவறான தகவல்களை கட்டுரையில் வெளியிட்டிருக்கிறீர்கள். தவறான கட்டுரை வெளியிட்டதற்கு ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவரும் சமமான பொறுப்பாவீர்கள். இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கட்டுரைக்கு அளித்த அதே முக்கியத்துவத்துடன் அந்த மன்னிப்பை உங்கள் பத்திரிகையில் பிரதானமாக வெளியிட வேண்டும். மேலும் நஷ்டஈடாக ரூ. 10 கோடி தரவேண்டும். தவறினால் உங்கள் அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
-
திரு. தயாநிதி மாறன்,
நாடாளுமன்ற உறுப்பினர் (லோக்சபா),
எண் 3. முதல் அவன்யூ, போட் கிளப் சாலை,
ஆர் ஏ புரம், சென்னை&6000 028


இவ்வாறு தயாநிதிமாறன் அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
தயாநிதிமாறனுக்கு போன் இணைப்பு கொடுக்கப்பட்டது முதல் மாதவாரியாக பயன்படுத்திய அழைப்புகள் பற்றிய முழு விவரம் (யூனிட்களில்).
பிஎஸ்என்எல் பொதுமேலாளர் மீனலோசினியின் 2009 மே 6&ம் தேதியிட்ட கடிதம்.


உண்மை உணர்த்தும் கடிதம்
பிஎஸ்என்எல் பொதுமேலாளர் மீனலோசினியின் 2009 மே 6&ம் தேதியிட்ட கடிதம்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டு டெலிபோன் இணைப்பு தொடர்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் வி.மீனலோசினி அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம்:
க்ஷி.விமீமீஸீணீறீஷீநீலீவீஸீஹ்,
நிணிழிணிஸிகிலி விகிழிகிநிணிஸி (ளிறி)
ழிஷீ.கிநிவி (றிநி)/விறி சிளிஸிஸி / 14tலீ லிஷி / 2009 2010 விணீஹ். 06, 2009
2009 மே 4ம் தேதியிட்ட தங்களின் கடிதம் கிடைத்தது. அது தொடர்பாக கீழ்க்கண்ட தகவல்களை தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்:
(1) மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தாங்கள் பதவி வகித்தபோது, சென்னை ஆர்ஏ புரம், போட் கிளப் சாலை, முதல் அவென்யூ எண் 3ல் உள்ள தங்கள் இல்லத்துக்கு ஒரே ஒரு பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு மட்டுமே தரப்பட்டது.
(2) 24371500&ஐஎஸ்டிஎன் பிஆர்ஏ என்ற ஒரே ஒரு இணைப்பு மட்டுமே தரப்பட்டது. இது தவிர வேறு எந்த பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பும் இந்த தேதிவரை தங்கள் இல்லத்துக்கு தரப்படவில்லை.
(3) இந்த தொலைபேசி எண்ணிலிருந்து (24371500) எத்தனை அழைப்புகள் பயன்படுத்தப்பட்டன என்ற விவரம் நாடாளுமன்ற தொடர்பு அதிகாரிக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. (இணைப்பு கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 2009 மார்ச் வரை 1,73,698 யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன). நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 ஆண்டுகளுக்கு 4,50,000 யூனிட் பயன்படுத்தலாம் என்ற அளவீடு இருந்தபோதும் தாங்கள் 1,73,698 யூனிட் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறீர்கள். தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக நீங்கள் பயன்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
(4) நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தாங்கள் ஆண்டு ஒன்றுக்கு 1,50,000 யூனிட் பயன்படுத்தலாம். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 தொலைபேசி இணைப்புகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன.
(5) அழைப்புகளுக்கான கட்டணம் குறித்த தகவல்கள், பயன்படுத்தப்பட்ட யூனிட்டுகள் குறித்த ஆவணங்கள் ஆகியவை ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்ற தொடர்பு அதிகாரியிடம் சான்றொப்பம் மற்றும் இறுதி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தேதி வரை நிலுவைத் தொகை எதுவும் இல்லை.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
வி.மீனலோசினி


இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தயாநிதிமாறன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர், ’’என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனக்கு எதிராக அரசியல் சதிச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.


எனது கட்சி, குடும்ப நேர்மையை சந்தேகிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புகார் கூறப்பட்டுள்ள காலத்தில் நான் தீவிர அரசியலில் இல்லை.


எனது இல்லத்தில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டுமே இருந்தது’’ என்று சொல்லிவிட்டு

பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் கடிதத்தை எடுத்துக்காட்டி தயாநிதிமாறன் விளக்கினார்.


பின்னர், ‘’நாளிதழ் வெளியிட்ட செய்தி அவதூறானது. பதவி காலத்தில் எந்த நிறுவனத்திற்கும் சலுகை காட்டியதில்லை. என் நேர்மையை நிரூபிக்க வாய்ப்பு தரவேண்டும். தவறு செய்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் எதிர்கொள்ளத்தயார்’’ என்று கூறிவிட்டு அவசர அவசரமாக கிளம்பினார்.


தயாநிதி மாறன் மீது அவதூறு புகார் -
ஜெ.க்கு திமுக கண்டனம் :

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கு திமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக தீர்மானக்குழு தலைவர் பொன்.முத்துராமலிங்கம், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா அளித்துள்ள பேட்டியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகி, சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்றும் அமைச்சர் பதவியில் இருந்து விலகாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா இந்தக் கருத்தை தெரிவிப்பதற்கு முன்பு, தன்னைப் பற்றிய சட்ட நடவடிக்கைகளை உணர்ந்து பதிலளிக்க வேண்டும். இன்றும் ஜெயலலிதா மீது பெங்களூர் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கிறது. அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுதான் வழக்கை சந்தித்தாரா?
தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வழக்கை சந்திக்க மாட்டார். ஆனால், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டுமா? மக்கள் இந்த விதண்டாவாதத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். ஜெயலலிதா இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன்பு தன்னைப் பற்றியும் தன்மீதுள்ள வழக்குகள் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment