கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 1, 2011

திமுக நிர்வாகிகள் அனைவரின் மீதும் பொய் வழக்குகள் போட முயற்சி: கே.என்.நேரு


திருச்சி மாநகர செயல்வீரர்கள் கூட்டம், திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு,

ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த ஆட்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரின் மீதும் பொய் வழக்குகள் போடுவார்கள். திமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப் போடுவது குறித்து தமிழக போலீசார்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.


அதில் முதல் கட்டமாக திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மீத கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடமுருட்டி சேகரை வெளியே கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இதற்காக யாரும் பயந்து விடாதீர்கள்.


கடந்த தேர்தலில் என்னிடம் 7 கோடி பணமும், 5 ஆயிரம் ஏக்கர் நிலமும், திருச்சி தில்லைநகரில் 63 வீடுகள் எனக்கு சொந்தமாக இருக்கிறது என்று மொட்ட கடிதாசியாகவும், அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தது. இது உண்மை இல்லை, மக்கள் நம்ப மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் நம்ம கட்சியில் உள்ளவர்கள் கூட இருக்குமோ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பிறகுதான், நான் தோல்வி அடைந்ததற்கு காரணம். ஆகவே வீண் வதந்திகளை நம் கட்சிக்காரர்களே பரப்ப வேண்டாம். தப்பு செய்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை.

இடைத்தேர்தல் திருச்சியில் வர இருப்பதால், இனி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மீது ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்வார்கள். நாம் அத்தனையையும் நீதிமன்றத்தின் மூலம் உண்மையில்லை என்று நிரூபித்து வெளியே வருவோம். அதையும் மீறி திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு கடுமையாக உழைத்து, வெற்றி பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்றார்.


முன்னாள் எம்எல்ஏக்கள் பெரியசாமி, கே.என்.சேகரன், ஸ்ரீரங்கம் மாயவன், நகர செயலாளர் அன்பழகன், பொருளாளர் கேகேஎம் தங்கராசு மற்றும் நகர, தொகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இநத கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கும் குடமுருட்டி சேகரை சந்தித்தார் கே.என்.நேரு :

திருச்சி மாவட்ட செயலாளர் கே.என். நேரு மற்றும் நகர செயலாளரும் துணை மேயருமான அன்பழகன் ஆகியோர் 01.06.2011 அன்று திருச்சி மத்திய சிறைக்கு சென்று அங்கே தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கும் குடமுருட்டி சேகரை சந்தித்தனர்.


சட்டப்படி விரைவில் விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்வதாக இருவரும் உறுதி அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment