திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், மாநாடுகளை போட்டு அல்ல; பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி அல்ல; ஆட்சிப் பொறுப்பிலே அரும்பெரும் காரியங்களை நடத்தி, அவைகளையெல்லாம் விழாக்களாக கொண்டாடி மட்டும் அல்ல; தி.மு.கழகத்தின் வளர்ச்சி ஆரம்ப காலத்திலேயிருந்து இதுவரையிலே மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக நடைபெற்றிருக்கின்றது என்றால் அதற்கு காரணம், நாம் தொடர்ந்து ஆற்றி வருகின்ற கொள்கைப் பிரச்சாரம், சமுதாய எழுச்சிப் பிரச்சாரம், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், நடுத்தர மக்கள், சிறுபான்மை மக்கள் இவர்கள் எல்லாம் தமிழகத்தில் நல்வாழ்வு பெற வேண்டுமென்பதற்காக சூளுரைத்து இன்று வரையிலே தொடர்ந்து அந்தப் பணியினை ஆற்றி வருகின்ற காரணத்தினாலேதான்.
திருமணத்தை நம் முடைய தம்பி கல்யாண சுந்தரம் அவர்கள், அவ ருடைய இல்லத்திலே இவ்வளவு சிறப்பாக நடத்துகிறார், இவ்வளவு பேர் இந்த மண விழா விற்கு வந்திருக்கிறோம் என்றால், இது திரும ணம் மூலமாகவும் நம் முடைய கழகத்தின் கொள்கைகளைப் பரப் புவதற்குக் கிடைத்திருக் கின்ற வெற்றி என்பதை யாரும் மறுக்க முடி யாது. தலைமைக் கழ கத்திலே பாடுபடுகின்ற தம்பிகளில் கல்யாண சுந்தரம் தலைசிறந்தவர்.
அப்படிப்பட்ட தம்பி யின் இல்லத்தில் நடை பெறுகின்ற இந்த மண விழாவிலே கலந்துகொள் வதிலும் மணமக்களை வாழ்த்துவதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மன நிறைவடைந்து இந்த அளவோடு வாழ்க மண மக்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
தயாநிதி மாறனே சி.பி.ஐ. விசாரணையை சந்திப்பார் - கலைஞர் :
திமுக தலைவர் கலைஞர் இவ்விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களூக்கு பேட்டியளித்தார்.
கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?
அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளதே?
தயாநிதி மாறனே அந்த வழக்கை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது.
சாக்கடையின் துர்நாற்றம் இப்போது வீசுகிறது. அடுத்து சந்தனம் மணக்கும் - கலைஞர் :
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிக்கு திமுக தலைவர் கலைஞர் பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி: கனிமொழி மீதான தீர்ப்பு இன்று (08.06.2011) வரவிருக்கின்ற நிலையில் - உங்களுடைய தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: அமைதியாக இருங்கள் - சாக்கடையின் துர்நாற்றம் இப்போது வீசுகிறது. அடுத்து சந்தனம் மணக்கும். அதுவரையில் பொறுத்திருங்கள்.
கேள்வி: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா மேலவை என்பது இனி வராது என்று சொன்னதோட அஸ்தமித்த சூரியன் இனி உதிக்காது என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: சூரியனுக்கு நிரந்தரமாக அஸ்தமனம் கிடையாது. அவர் சும்மா சொல்லியிருப்பார்.
கேள்வி: மத்திய அமைச்சர் தயாநிதி மாறனைப் பற்றி ஏடுகளில் எல்லாம் செய்தி வந்துள்ளதே?
பதில்: அதைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியாது,
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment