கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 4, 2011

கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து


கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து

கலைஞரின் தனிபெரும் சிறப்பு 70 ஆண்டுகால இடைவிடாத போராட்டம், போராட்டம் என்பது கலைஞருக்கு சுவாசம். பொதுவாழ்வின் முதல் தகுதி அவமானம் என்றார் பெரியார். தமிழ்நாட்டில் அதிகமான அவமானத்தை சந்தித்தவர் கலைஞர் மட்டும்தான். கலைஞர் ஆலமரமோ , அரசமோ அல்ல அவர் ரப்பர் மரம். ரப்பர் மரத்துக்கு ரனங்கள் புதிதல்ல, வெட்ட வெட்ட பால் சுரக்கும், கலைஞரும் அப்படித்தான்.

தமிழ்நாடு பக்தி சமுதாயமாக, அடிமை சமுதாயமாக ,ஏவல் சமுதாயமாக இருந்த நிலையிலிருந்து அறிவுசமுதாயமாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர் கலைஞர் தேசிய விருது பெற்று வாழ்த்து பெற சென்ற நேரத்தில் எத்தனையாவது விருது என்று கேட்டார் ஆறாவது முறை பெற்ற விருது என்றேன், என்னால் தான் ஆறாவது முறை முதல்வராக முடியவில்லை நீங்களாவது ஆறாவது முறையாக பெற்றீர்கள் என்று நகைச்சுவை பொங்க சொன்னார்.தமிழுக்கு என்றும் அவர்தான் முதல்வர். ஆறு தேசிய விருதுக்கும் எனக்கு கலைஞர் அறிவித்த சால்வையை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

கடந்தமுறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் கருணாநிதியை முத்துகருப்பண் தலைமையிலான போலிஸ்படை அராஜகமான முறையில் கைது செய்தது.

இந்நிகழ்வு உடனடியாக சன் டிவி ஒளிபரப்பியது. அரசியல்வாதிகள், மக்கள்கள் கொதித்தெழ அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு நிருபர் கருணாநிதியிடம் உங்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா? என்று கேட்க

அதற்கு அவர், நான் என்ன சுதாகரனா? என்றார்.

கைதிலிருந்து, விடுதலைவரை அவர் அடைந்த துன்பத்தின் சுவடுகூட மாறாத நிலையிலும் அவரின் நகைச்சுவை உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?.


கலைஞர் செயலாற்றலுக்கு ஒரு உதாரணம் - மறைமலை அடிகள் நூலகம் பராமரிப்பற்று இருக்கிறது என்று தகவல் வந்தபோது தலைவரிடம் தொலைபேசியில்ன்பேசினேன், சரி பார்ப்போம் என்றார். சிறிது நேரத்தில் தங்கம் தென்னரசு போன் செய்து கலைஞர் ஆணையிட்டிருக்கிறார் மறைமலை நூலகத்திற்கு போய்க்கொண்டிருக்கிறேன் என்றார். காமராஜர் ஆகட்டும் பார்க்கலாம் என்பார் கலைஞர் ஆயிற்று பார்த்தாயா என்பார். தமிழ்சமுதாயமே நீயாவது நன்றியுள்ளவனாக இரு.

கலைஞர் ஒரு திரைக்காவியம் என்ற தலைப்பில் குஷ்பு ஆற்றிய உரை:

எட்டு வயதில் பள்ளியில் சீட் வேண்டும் என்று கேட்ட போராட்டம் 88 வயது வரை தொடர்ககிறது . போராட்டத்தை கண்டு தலைவரும் அஞ்சுவதில்லை அவரை பின்பற்றுகின்ற தொண்டர்களும் அப்படித்தான்.

மூட நம்பிக்கை, பெண்ணடிமை, ஏழை பணக்கார ஏற்றத்தாழ்வு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை வசனமாக்கினார், மக்கள் கைதட்டினார்கள், ஓட்டுபோட்டார்கள், வசனங்கள் எல்லாம் சட்டமானது.


No comments:

Post a Comment