காஞ்சிபுரம் நகர திமுக சார்பில், திமுக உயர்நிலைக்குழுவின் செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் வணிகர் வீதியில் 21.06.2011 அன்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு, நகர செயலாளர் சேகர் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். அவைத் தலைவர் கந்தசாமி, துணை செயலாளர்கள் சந்துரு, பாலவிநாயகம், தவமணி, புகழேந்தி, பொருளாளர் பொன்.காமராசன், இளைஞர் அணியை சேர்ந்த அபுசாலி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பேசும்போது, ‘‘தோல்வி என்பது நிலையானது கிடையாது. இங்கு இருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது இது தோற்கின்ற கட்சியா என்று கேட்டால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏழை, பணக்காரன் என அனைவரும் ஒன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால், அதிமுக அரசு அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களை கிழிக்கிறது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, உடனே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், கம்பம் செல்வேந்திரன், மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், துணைச் செயலாளர் பொன்மொழி, மாவட்ட அவைத் தலைவர் கே.சுந்தர், பொருளாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment