சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் 10.06.2011 அன்று வந்தனர். ஆனால் சட்டசபைக்குள் செல்லாமல் அவை நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.
அதன் பின்னர் வெளியே வந்த எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அதன் பின்னர் வெளியே வந்த எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஒரு ஆட்சியின் கொள்கை பற்றி சொல்வதுதான் ஆளுநர் உரை. அதிலுள்ள தடுமாற்றங்கள், பல்வேறு திட்டங்கள் ரத்து போன்றவற்றை சுட்டிக்காட்ட முன்வந்தோம். ஆனால் ஒரு வார காலமாக ஜனநாயக கடமையாற்ற எங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திமுக எம்எல்ஏக்களுக்கென உரிய இருக்கைகள் ஒதுக்கி தரப்படவில்லை. இதுசம்பந்தமாக கடந்த இரு நாட்களாக சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கடிதம் மூலமாக புகார் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக இன்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறோம்.
இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.
09.06.2011 அன்று திமுக உறுப்பினர்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படாததால் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment