கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 2, 2011

கருணாநிதி பிறந்த நாள் 3ம் தேதி ரத்ததானம் : திமுக மாணவர் அணி ஏற்பாடு


திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் மாணவர் அணி சார்பில் 3ம் தேதி ரத்ததான முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, திமுக மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி 01.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் வளத்துக்கும், எதிர்கால நலத்துக்கும், தனது வாழ்நாளை அளித்து 88 வயதிலும் நாட்டை காக்க பாடுபட்டு வரும் மாணவ சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரம், திராவிடச் சூரியன் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் 3ம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா அறிவாலய வளாகத்தில் ரத்த தான முகாம் நடைபெறும்.
மாணவர் அணி மாநில செயலாளர் இள.புகழேந்தி தலைமை வகிப்பார். சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, மாணவர் அணி துணைச் செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ., குத்தாலம் அன்பழகன், கோவை கணேசுகுமார், பூவை ஜெரால்டு செங்குட்டுவன், க.மகிழன் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.
தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., இந்த ரத்ததான முகாமை தொடக்கி வைக்கிறார். தமிழாய் வாழ்ந்து வரும் தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில், இந்த ரத்தான முகாமுக்கு மாணவர் அணி நிர்வாகிகள், மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மரியாதை :

திமுக தலைவர் கருணாநிதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார், அண்ணா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வரும் 3ம் தேதி 88வது வயது பிறக்கிறது. இதை முன்னிட்டு, திமுக 01.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி, 3ம் தேதி காலை 7 மணிக்கு பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கிறார். 7.15 மணிக்கு, தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment