கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 22, 2011

பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் : திமுக


டெல்லியில் 21.06.2011 அன்று நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ல் தொடங்கவுள்ள நிலையில், இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது குறித்து ஆளும் கூட்டணி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.


பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


திமுக தலைவர் கலைஞர் அன்றைய தினம் டெல்லியில் இருந்தபோதிலும் அவர் கூட்டத்துக்கு வரவில்லை. திமுக சார்பில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.


இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களிடையே பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்பால் மசோதா தொடர்பாக அண்ணா ஹசாரே குழுவினருடன் நடத்திய பேச்சு குறித்து விவரித்தார்.


அதைத் தொடர்ந்து கறுப்புப் பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் - திமுக :

ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் கூட்டம் நேற்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆனால் டெல்லியில் இருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொள்ளவில்லை.

இதனையடுத்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆலோசனையின் போது, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறுகையில், பிரதமர் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளிடம் லோக்பால் மசோதா குறித்து விவாதித்தார்.

அப்பொழுது தி.மு.க. சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு பிரதமரை லோக்பால் வரையறைக்குள் சேர்க்கக்கூடாது என்ற அரசின் நிலைமையை தி.மு.க. எதிர்க்கிறது.

பிரதமர் பதவியையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் எனவும், லோக்பால் மசோதா குறித்த கருத்துக்களை நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

No comments:

Post a Comment