திருப்பூரில் நடந்த முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமியின் இல்ல திருமண விழாவில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு மாநகர தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 18.06.2011 அன்று இரவு கோவை வந்தார்.
திருப்பூர் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 19.06.2011 அன்று காலை கோவையில் இருந்து அவர் திருப்பூர் புறப்பட்டு வந்தார்.
திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் மாநகர தி.மு.க. சார்பில், மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர தி.மு.க. துணை செயலாளர் டி.கே.டி.நாகராஜ் தலைமையில், நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்ய கார்த்தி திருமண மண்டபத்தில் நடந்த திருப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமியின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மணமக்கள் சிந்து பாரதி& ஜெயப்பிரகாஷ் இணையை அவர் வாழ்த்தி பேசினார்.
இந்த விழாவில், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு முத்துசாமி, திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜ், பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சி.கே.குப்புசாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment