கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 15, 2011

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் நேரில் விசாரித்தார் கலைஞர்


தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதுகு வலி காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப் பட்டு வந்தார். இதற்காக அவர் சென்னை மியாட் டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற் றார். அவருக்கு அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மு.க.ஸ்டாலின் 14.06.2011 அன்று வீடு திரும்பினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர். ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு 15.06.2011 அன்று சென்று உடல்நலம் விசா ரித்தார். தற்போது மு.க. ஸ்டாலின் ஓரளவு முதுகு வலியில் இருந்து குணமாகி விட்டார். அவ் வப்போது பிசியோதெ ரபி சிகிச்சை செய்து கொள்கிறார்.

அடுத்த மாதம் 2ஆம் தேதி அண்ணா அறிவா லயத்தில் கலைஞர் பிறந்த நாள் விழாவையொட்டி இளைஞரணி அறக்கட் டளை சார்பில் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 தேர் வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவி களுக்கு பரிசளிக்கும் விழா நடக்கிறது.

இந்த விழா மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கி றது. பேராசிரியர் அன் பழகன் மாணவர் களுக்கு பரிசு வழங்கு கிறார். மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 48 மாணவர் களுக்கும், மாவட்ட அளவில் 477 மாணவர்களுக்கும் இதில் பரிசு வழங்கப்படு கிறது.

No comments:

Post a Comment