கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, June 17, 2011

சமச்சீர் கல்வி பிரச்னையில் வீம்பு காரணமாக அரசு வீண் செலவு - முன்னாள் முதல்வர் கருணாநிதி


சமச்சீர் கல்வி பிரச்னையில் வீம்பு காரணமாக அதிமுக அரசு வீண் செலவு செய்கிறது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி 15.06.2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் பிரதான பகுதியில் 30 ஆயிரம் சதுர அடியில் இடம் தேவை என தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று வெளியான செய்தி குறித்து...?
ஆகாத மருமக கை பட்டா குற்றம், கால் பட்டா குற்றம் என்பது கிராமத்துப் பழமொழி. அதிலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு, தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது செய்யப்பட்ட செயல்பாடுகள் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்தது கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் என்பதால் கோபமடைந்து செம்மொழி ஆய்வு நிறுவன நூலகத்திற்கு குறிப்பிட்டு வேறு எந்த இடத்தையும் ஒதுக்காமல் இரவோடு இரவாக காலி செய்து விட்டார்கள்.
தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்த பரிதிமாற்கலைஞர் என்ற பெயரில் கலைஞர் என்ற பெயர் இடம் பெற்ற காரணத்தாலோ, அந்த நிறுவனம் கழக ஆட்சியில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதாலோ காழ்ப்புணர்ச்சியின் உச்சி முகடு வரை சென்று அ.தி.மு.க. ஆட்சியினர் அதனைப் படாதபாடு படுத்தி வருகின்றனர்.
டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் காரை அனுப்பி அழைத்துச் சென்றதாக மிகைப்படுத்தி ஒரு செய்தி வந்திருக்கிறதே?
பிரதமரைச் சந்திக்க எந்தவொரு மாநில முதலமைச்சர் டெல்லிக்குச் சென்றாலும், பிரதமர் அலுவலகத் திலிருந்துதான் கார் வந்து அழைத்துச் செல்லும். அது பாதுகாப்பு கருதி செய்யப்படுகின்ற ஒன்று. பல ஆண்டுகளாக நடைமுறையிலே இருந்து வருகின்ற ஒன்றாகும்.
அதைக்கூட பெரிதுபடுத்தி, பிரதமரே காரை யனுப்பி அழைத்துச் சென்றதாக சில ஏடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
தலைமைச் செயலகத்திற்கு புதிய கட்டடம் கட்டியதை, தான் ஒரு போதும் எதிர்த்தது இல்லை என்றும், ஆனால் அங்கிருந்து பணியாற்றுவது நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால் தான் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் சொல்லியிருக்கிறாரே?
எத்தனையோ காரணங்களை அவர் கூறினாலும் அவர் உள்ளத்தில் புதைந்திருக்கும் உண்மையான காரணத்தை மக்கள் அறிவார்கள். பல்வேறுதுறை அலு வலகங்கள் ஓரிடத்திலும், அமைச்சர்களின் அலுவலகங்கள் ஓரிடத்திலும் இருந்தால் கோப்புகள் செல்ல இயலாது, அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதைத்தான் நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்று கூறுகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும்தான் இருக்கின்றன. அங்கிருந்து கோப்புகள் அமைச்சர்களை சென்றடையவில்லையா? புதிய கட்டிடத்திற்குள் காலி இடம் அதிகமாக உள்ளது என்று ஒரு காரணத்தையும் ஜெயலலிதா சொல்லியிருக் கிறார். காலி இடம் அதிகமாக உள்ளது என்பதால், மொத்த இடத்தையும் காலியாக வைப்பேன் என்று அவர் சொல்கிறார் போலும். என்ன செய்வது? தமிழ் நாட்டு மக்கள் தாங்கள் செய்த தவறுக்கான விளைவை அனுபவித்துத் தானே தீர வேண்டும்!
சமச்சீர் கல்வியை நிறுத்தாமல் இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்தியிருக்கிறதே?
அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமச்சீர் கல்வியை நிறுத்தாமல் இந்த ஆண்டே தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென்று கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அது தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும் அவர்கள் செய்யும் நன்மையாக இருக்கும்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு திருத்தச்சட்டம் கொண்டு வந்து இந்த ஆண்டு நிறுத்தி வைத்த காரணத்தால் ஏற்பட்ட விளைவு என்ன?
சமச்சீர் கல்வி நிறுத்தப்பட மாட்டாது என்றுகூட தன்னைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் அந்தத் துறையின் அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அவர் கூறியதற்கு மாறாக ரூ. 200 கோடிக்கு மேல் செலவழித்து அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட ஆறரைக் கோடி புத்தகங்களைச் செல்லாது என்று கூறிவிட்டு, தற்போது ஜூன் 15ம் தேதிக்குள் புதிய பாடத் திட்டப்படி புத்தகங்களை அவசர அவசரமாக அச்சடிக்க ஏற்பாடுகள் அரசினால் நடைபெற்றன.
அந்த விவகாரத்தில் பழைய விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து புத்தகங்களை அச்சிட அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாக சிங்கிள் கலரில் ஏ 4 அளவில் எட்டு பக்கங்கள் அச்சடிக்க ஏற்கனவே ரூ. 34 வழங்கப்பட்டு வந்தது என்றும்; இந்தத் தொகை ரூ. 70ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், பைண்டிங் செய்வதற்கு ஏற்கனவே ரூ. 24 வழங்கப் பட்டதற்கு மாறாக தற்போது ரூ. 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கலர் பாடப் புத்தகங்களை ஏ.4 அளவில் எட்டு பக்கங்கள் அச்சடிக்க ரூ. 85 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த கால அரசின் முடிவிற்கு மாறாக, வீம்பின் காரணமாக இந்த அரசு செயல்பட முயற்சிப்பதால் அரசிற்கு ஏற்பட்டுள்ள முதலாவது வீண் செலவு என்று இதனை எடுத்துக்கொள்ளலாம்.
சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க. அரசின் திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத்தடையாணை கொடுத்த பிறகும், அதனைக் கேட்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டது, அ.தி.மு.க. அரசுக்கு தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.
தற்போது உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும் என்றும், மற்ற வகுப்புகளைப் பொறுத்தவரை ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஆராய்ந்து அறி க்கை கொடுத்து, அதன்மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறிவிட்டது.
பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்ற நிலையில் உயர்நீதிமன்ற முடிவு தெரிகின்ற வரையில் மாணவர்கள் எந்தப் புத்தகங்களை படிப்பார்கள் என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாக உள்ளது.
தேவையில்லாமல் அ.தி.மு.க. அரசு வந்ததும் வராததுமாக மேற்கொண்ட முடிவு காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் பழைய திரைப்படம் ஒன்றில் பீம்சிங், இதென்ன புதுக்குழப்பம்? என்று பேசப்பட்ட வசனங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment