முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீராபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சேலத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலையானார். பின் மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் கோவை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி விரும்பிய சிறைக்கு மாற்றுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எந்த மாவட்டத்தில் கைது செய்யப்படுகிறார்களோ, அந்த மாவட்ட சிறையில்தான் சட்டப்படி அடைக்க வேண்டும். அதன்படி வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் சிறையில்தான் அடைக்க வேண்டும். எனவே வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் 08.08.2011 அன்று விசாரித்து, உள்துறை செயலாளர், போலீஸ் கமிஷனர், திருச்சி சிறை எஸ்.பி. ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விட மறுப்பு :
அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விட மறுப்பு :
கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விடுவதற்கு ஐகோர்ட் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநாவலடிவிலையைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார். இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விட அனுமதிக்க முடியாது எனக்கூறி அம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment