கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 2, 2011

நிலம் அபகரித்ததாக வழக்கு : முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது - போலீசார், திமுகவினர் தள்ளுமுள்ளு








நிலம் அபகரித்த வழக்கு தொடர் பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி 31.08.2011 அன்று கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப் பட உள்ளதாக 31.08.2011 அன்று காலை தகவல்கள் வெளியா னது. விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் வசிக்கும் பொன்முடி வீட் டின் முன்பு நூற்றுக்கணக் கான திமுகவினர் 31.08.2011 அன்று காலை 8 மணி முதல் குவிந்தனர். விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் எஸ்பி தினகரன் முகாமிட்டிருந் தார். நேரம் செல்ல செல்ல பதற்றமான சூழ்நிலை அதிகரித்தது.
மேலிட உத்தரவு வந்த தும் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் ஜெயராஜ், விழுப்புரம் சேகர், இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட குற்றப்பிரிவு சங்கர் மற்றும் ஜோகிந்தர், குமார், தமிழ்மாறன், சுதந்திரராஜன், சக்திவேல் ஆகியோர் பொன்முடி வீட்டுக்குள் மதியம் 1.35 மணிக்கு நுழைந்தனர். அவர்களை திமுகவினர் தடுத்து கோஷமிட்டனர். திமுகவினரை தள்ளிவிட்டு உள்ளே சென்ற போலீசிடம் திமுக வக்கீல்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணியாளர்கள் வீடு கட்டும் சங்கத்துக்கு சொந்தமான 61600 சதுரடி இடத்தை சிகா கல்வி அறக்கட்டளைக்கு பதிவு செய்துகொடுக்க மிரட்டியதற்காக உங்களை கைது செய்கிறோம் என்று கூறி பொன்முடியை வீட்டில் இருந்து மதியம் 2.15 மணிக்கு வெளியே அழைத்து வந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீஸ் வேனில் பொன்முடியை ஏற்றினர். போலீஸ் வேனுக்கு வழிவிடாமல் கிழக்கு பாண்டி ரோட்டில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீ சார் அப்புறப்படுத்தி கோலி யனூர் வழியாக திண்டிவனத்துக்கு கொண்டு சென்று, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, விழுப்புரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த நாராயணசாமி(அதிமுக தொழிற்சங்க நிர்வாகி மற்றும் தந்தை பெரியார் நகர் குடியிருப் போர் நலச்சங்க தலைவர்) என்பவர் விழுப்புரம் எஸ்பி தினகரனிடம் 30.08.2011 அன்று கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்முடியை கைது செய்துள்ளதாக கூறினர். நாராயணசாமி கொடுத்த புகார் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து போலீசார் கூறியதாவது:
தந்தை பெரியார் போக்குவரத்து கழக பணியாளர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு விழுப்புரம் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் 32 ஏக்கர் நிலம்(சாலாமேடு ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது) வாங்கப்பட்டது. அந்த இடத்தில் தந்தை பெரியார் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 393 வீடுகளாக வழங்கப்பட்டது. மீதம் இருந்த 1,44,000 சதுரடி இடத்தில் பள்ளி, சமுதாய கூடம், விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தினர். இதனால் பள்ளி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 43560 சதுரடி இடம், விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட 18040 சதுரடி இடம் என 61600 சதுரடி இடத்தை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு சங்க பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. சந்தை மதிப்பில் ரூ.2.65 கோடி மதிப்புள்ள 61,600 சதுரடி நிலத்தை ஏலம் விடுவதற்காக சங்கத்தில் 2007ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வர முடிவானது. போலி ஆவணங்கள் மற்றும் போலி கையெழுத்துகள் மூலம் ஒருதலைபட்சமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் துணை பதிவாளர் லட்சுமிகாந்தன், செயலாளர் சாந்தி மற்றும் தனி அலுவலர் தேவக்குமாரன் உள்ளிட்டவர்கள் துணையாக இருந்துள்ளனர். மேலும் பொன் முடி உத்தரவுபடி சிகா கல்வி அறக்கட்டளைக்கு 61,600 சதுரடி இடம் 2007ம் ஆண்டு பதிவு செய்துகொடுக்கப்பட்டது. இதற்காக அறக்கட் டளை தலைவர் மணிவண் ணன், நிர்வாகி சரஸ் வதி(பொன்முடி மாமியார்) ஆகியோர் ரூ.61 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கொடுத்து பத்திர பதிவு செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி சாந்தி, மணிவண்ணன், சரஸ்வதி, பொன் முடி உள்ளிட்டவர்கள் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் முத்தமிழ்நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சங்க செயலாளராக பணியாற்றிய ரமேஷ் மனைவி சாந்தி(39), விழுப்புரம் கே.கே.ரோடு ஆஞ்சநேயர் திருமண மண்டபம் அருகே நேற்று காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்டார். சங்க அலுவலகத்தில் இருந்து போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், சங்கத்திற்கு சொந்தமான 61600 சதுரடி நிலத்தை விற்க முடிவு செய்தபோது பொன்முடி அழைத்ததன் பேரில் துணை பதிவாளர் லட்சுமிகாந்தன், தனி அலுவலர் தேவக்குமாரன், நானும் சென்றதாகவும், அப்போது அவர், யாரை கேட்டு இடத்தை விற்கிறீர்கள் என்று திட்டி சிகா அறக்கட்டளைக்குதான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும், அதன்படி போலி ஆவணங்களை தயாரித்து சிகா கல்வி அறக்கட்டளைக்கு பதிவு செய்து கொடுத்தாகவும் சாந்தி கூறினார்.
இதற்கிடையில் விழுப்புரம் கோட்டாட்சியர் பிரியா முன்னிலையில் தேவக்குமாரன் 31.08.2011 அன்று காலை 10.45 மணிக்கு ஆஜ ராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையிலும், சாந்தி மற்றும் தேவகுமாரன் ஆகி யோரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பொன் முடியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளோம். இதே போல் சாந்தியும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிவண் ணன், சரஸ்வதி உள்ளிட்டவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பொய் வழக்கு- பொன்முடி ஆவேசம் :
கைது செய்யப்பட்ட பிறகு பொன்முடி கூறுகையில், காவல்துறையினர் வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டு என்னை கைது செய்துள்ளனர். குற்றவாளி ஒருவரே என் மீது குற்றம்சாட்டியதாக இவர்களாகவே பதிவு செய்துள்ளனர். திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியதுபோல் இதற்கு காரணமான போலீசார் மற்றும் பொய் புகார் கொடுத்தவர் மீது உச்சநீதிமன்றம் மற்றும் மனித உரிமை கழகத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன். சட்டத்தை மதித்து நடந்துகொள்ளும் பண்பாடு உள்ளவர்கள் நாங்கள் என்பதால் செல்கிறேன். இதன்பிறகாவது பொய் வழக்கு புனைவதை போலீசார் நிறுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
என்னென்ன பிரிவுகள்:

பொன்முடி உள்ளிட்டவர்கள் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது. 409 (அரசு ஊழியர் முறைகேடு செய்தல், 420 (மோசடி), 465 (போலி ஆவணம் தயாரித்தல்), 467 (மதிப்பிற்கு உரிய ஆவணத்தை போலியாக தயாரித்தல்), 468 (தெரிந்தே போலி ஆவணம் தயாரித்தல்), 471 (போலி ஆவணத்தை உண்மை ஆவணமாக பயன்படுத்துதல்), 120(பி) (சதித்திட்டம்), 353 (அரசு ஊழியரை மிரட்டுதல்), 506(1)(மிரட்டுதல்).

திண்டிவனம் கோர்ட்டில் போலீசார், வழக்கறிஞர்கள் மோதல் :
விழுப்புரத்தில் பொன் முடியை கைது செய்து திண்டிவனம் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் போலீஸ் வேன்முன்பு படுத்து போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை நுழையவிடாமல் போலீசார் தடுத்ததால் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நீதிபதி சந்தோஷ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பொன்முடியை கடலூர் மத்திய சிறையில் 15 நாட் கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக திண்டிவனத் தில் எம்பி ஆதிசங்கர், பொன்முடி மகன் கவுதமசிகாமணி, பொன்முடி மாமனார் தங்கம், முன் னாள் எம்எல்ஏக்கள் புஷ்ப ராஜ், உதயசூரியன், சேதுராமன், திருநாவுக்கரசு, செஞ்சி கண்ணன், மஸ்தான், விழுப்புரம் சேர்மன் ஜனகராஜ், திண்டிவனம் சேர்மன் பூபா லன், மாவட்ட துணை செயலாளர் அசோகன், ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம், மயிலம் சேர்மன் மலர்கண்ணன், மரக்காணம் முன்னாள் சேர்மன் காளிதாஸ், ஒன் றிய செயலாளர் நல்லூர் கண்ணன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், கோர்ட் முன் குவிந்தனர்.

நீண்ட போராட்டத்துக்கு பின் கடலூர் சிறையில் அடைப்பு :

விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி திண்டிவனம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை சேலம் சிறைக்கு அனுப்ப போலீசார், நீதிபதியிடம் தெரிவித்தனர். ஆனால் நீதிபதியிடம் பொன்முடி தனது உடல்நிலை சரியில்லை என கூறியதால், கடலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அங்கிருந்து கடலூர் சிறைக்கு போலீசார் பொன்முடியை அழைத்து வந்தனர். வேனில் வந்த போது, கடலூர் சிறையில் வைக்க வேண்டாம், சேலத்தில் வைக்க சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. கடலூர் சிறைக்கு முன்பே வேன் நிறுத்தப்பட்டது. அப்போது சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்வதாக பொன்முடியிடம் போலீசார் தெரிவித்தனர். வேனிலில் இருந்து இறங்கிய பொன்முடி, நான் சேலம் சிறைக்கு செல்ல மாட்டேன், என்றார். இதனால் போலீசுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் செய்த போலீசார் அவரை சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பொன்முடி, நான் இறந்தாலும் சேலம் சிறைக்கு செல்ல மாட்டேன். நீதிபதி உத்தரவின் பேரில் இங்கு தான் இருப்பேன், என்றார். இதையடுத்து சிறைச்சாலை வாசலில் பொன்முடியை அமர வைத்து விட்டு, கடலூர் சிறைச்சாலை அதிகாரிகள் சென்னை போலீஸ் உயர்அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் பொன்முடி சிறை வாசலிலேயே உட்கார வைக்கப்பட்டார். பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இரவு 8 மணிக்கு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். நள்ளிரவில் சேலம் கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் முன்னாள் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சிறைச்சாலை முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments:

Post a Comment