கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

முவரின் தூக்கு தண்டனையை குறைக்க தீர்மானம் நிறைவேற்றக் கோரி திமுக வெளிநடப்பு


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி சட்ட சபையிலிருந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். . புதுச்சேரி சட்டபேரவை 03.09.2011 அன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. கேள்வி நேரம் முடிந்த பின்னர் பூஜ்ய நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் பேசும் போது, தூக்கு தண்டனை கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்.


அப்போது பேசிய சபாநாயகர் சபாபதி, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதனை எடுத்துக் கொள்ள முடியாது என்றும், இது குறித்து பேசிய அனைத்தையும் சபை குறிப்பேட்டில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்தார்.


இதனை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜீம், நந்தா சரவணன் ஆகியோர் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு சபையில் இருந்து வெளியேறினர்.

தொடர்ந்து இது தொடர்பாக எந்த கருத்தும் அவையில் எடுத்துக் கொள்ள முடியாது என்று சபாநாயகர் சபாபதி கூறியதால், அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment